தனியாக இருந்த பெண் பலாத்காரம்.. தப்பி ஓடும்போது போலீஸ் துப்பாக்கியை பிடுங்கிய டெலிவரி பாய்! பரபரப்பு
டெல்லி: நொய்டாவில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யச் சென்ற இளைஞன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கூட அது பெரியளவில் குறையவில்லை.
பெண்களைக் குறிவைத்து, அதிலும் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது கிரேட்டர் நொய்டாவில் நடந்துள்ளது.
பாலியல் பலாத்காரம்: கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கும் பெண், மொபைல் செயலி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். 23 வயதான சுமித் சிங் என்ற அந்த இளைஞன் மளிகை பொருட்களை டெலிவரி செய்ய வந்துள்ளான். மளிகை பொருட்களைக் கொடுக்கும் போது அந்த பெண் வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்டான். இதையடுத்து வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்த அந்த டெலிவரி ஏஜெண்ட் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினான்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. அன்றைய தினம் பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.. இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பலாத்காரம் செய்த நபர் யார் என்பது தெரிய வந்த நிலையில், அவனைப் பிடிக்க போலீசார் பல்வேறு சிறப்புக் குழுக்களை அமைத்தனர்.
துப்பாக்கியைப் பிடுங்கியதால் பரபரப்பு: சுமித் எங்கே இருக்கிறான் என்பதை கண்டறிந்த போலீசார், அவனைப் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது போலீசார் அசந்த நேரம் பார்த்து சுமித் கான்ஸ்டபிள் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துள்ளான். பிறகு போலீஸை மிரட்டியவாறே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அப்பகுதியில் தான் அவன் மறைந்து இருக்கிறான் என்பதை உறுதி செய்த போலீசார், அவனைப் பிடிக்க SWAT குழுவை உதவிக்கு அழைத்துள்ளனர்.

அவன் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார், அவனை நெருங்கியுள்ளனர். அப்போது அவன் போலீசாரை நோக்கிச் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாரும் தற்காற்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் அந்த நபருக்குக் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவன் போலீசார் கைது செய்தனர்.
சிகிச்சை: இதையடுத்து அவன் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். ஏற்கனவே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற குற்றச்சாட்டில் இவன் கைதாகி இருந்தும் விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் அடுத்த கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications