நீதிபதி லோயா மரணம், ஹாதியா, ஓரினச்சேர்க்கை.. தலைமை நீதிபதி சந்திரசூட்டின் முக்கிய உத்தரவுகள்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்று இருக்கும் நிலையில் அவர் வழங்கிய குறிப்பிடத்தக்க தீர்ப்புகள் என்ன என்று பார்ப்போம்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த சில மாதங்களுக்கு முன் பதவியேற்ற நீதிபதி யு.யு.லலித்தின் பதவிகாலம் நிறைவடைந்து இருக்கிறது.
இதனை தொடர்ந்து இன்று காலை உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்று உள்ளார்.

பணி அனுபவம்
வழக்கறிஞராக சட்டப்பணியை தொடங்கி, பேராசிரியராகவும், இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், அலஹாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த சந்திரசூட் கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யப்பட்டார்.

தீர்ப்புகள்
அக்டோபர் 19 ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக 6 ஆண்டுகளாக இருந்து வரும் சந்திரசூட் 1057 அமர்வுகளில் சக நீதிபதிகளுடன் 513 தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். அதிகபட்சமாக 94 சேவை வழக்குகளிலும் 89 குற்ற வழக்குகளிலும் சந்திரசூட் தீர்ப்பளித்து உள்ளார். அரசியலமைப்பு வழக்குகளில் 45 தீர்ப்புகளையும், சிவில் வழக்குகளில் 56 தீர்ப்புகளையும், நுகர்வோர் வழக்குகளில் 37 தீர்ப்புகளையும் அவர் வழங்கி இருக்கிறார்.

ஓரினச்சேர்க்கை வழக்கு
ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற 377 சட்டப்பிரிவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த அமர்வில் இடம்பெற்ற சந்திரசூட், இதை எதேச்சதிகராம் கொண்ட காலணியாதிக்க சட்டம் என்று விமர்சித்தார். இந்த சட்டம் சம உரிமை, கருத்து சுதந்திரம், வாழ்க்கை மற்றும் தனியுரிமைக்கு எதிராக உள்ளது என்று கூறி LGBTQ சமூகத்தினருக்கு அரசியலமைப்பு உரிமை இருப்பதாக கூறினார்.

ஹாதியா மதமாற்ற வழக்கு
கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி ஹாதியா, இஸ்லாமிய மதத்துக்கு மாறி ஷபீன் ஜஹானை திருமணம் செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட், "யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதையும், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பதையும் முடிவெடுக்கும் உரிமை வயது வந்த பெண்ணுக்கு உள்ளது." என்று கூறி திருமணம் செல்லும் என தீர்ப்பளித்தார்.

சபரிமலை வழக்கு
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சந்திரசூட், "10 முதல் 50 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். தீண்டாமைக்கு தடை விதித்து இருக்கும் சட்டத்தையும் இது மீறுகிறது. பெண்களின் சுய உரிமை, சுதந்திரம், கண்ணியத்தை இது சீர்குலைக்கிறது." என விமர்சித்தார்.

டெல்லி ஆளுநர்
டெல்லி அரசில் துணை நிலை ஆளுநரின் தலையீடு தொடர்பான வழக்கை விசாரித்த சந்திரசூட், "ஆளுநர் டெல்லியின் நிர்வாகத் தலைவர் கிடையாது. ஜனநாயகம் என்பதே நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத அம்சம். எனவே நிர்வாகத்தை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவே வழிநடத்த வேண்டும். முதலமைச்சரின் உத்தரவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அவருக்கென ஜனநாயகத்தில் சுதந்திரமான அதிகாரம் இல்லை." என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி லோயா வழக்கு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான சொராபுத்தீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தெஹ்சீன் பூணாவாலா தொடர்ந்த வழக்கை விசாரித்த சந்திரசூட், அதனை தள்ளுபடி செய்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications