கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு MIS-C நோய் ஏற்பட வாய்ப்பு.. அறிகுறிகள் என்ன?
டெல்லி: கொரோனா இரண்டாவது அலையால் நாடு தொடர்ந்து தடுமாறி வருகிறது. ஆனால், இதன் பக்க விளைவுகளும் வெவ்வேறு வகைகளில் மக்களை தாக்கி வருகின்றன.
மகாராஷ்டிராவில் கொரோனாவிலிருந்து மீண்ட பெரியவர்கள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மல்டிசிஸ்டம் அழற்சி நோய் (எம்ஐஎஸ்-சி) multisystem inflammatory syndrome (MIS-C) அறிகுறிகள் உள்ளன.
நாக்பூரில் 2-12 வயதுக்கு இடைப்பட்ட ஆறு நோயாளிகள் எம்ஐஎஸ்-சி அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கம்
இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) குழந்தை மருத்துவர் டாக்டர் சஞ்சீவ் ஜோஷி கூறுகையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் உள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு எம்.ஐ.எஸ்-சி நோய் பரவல் ஏற்படுகிறது. இதற்கு காரணம், அந்த குழந்தைகள் 'கோவிட் ஆன்டிபாடிகளை' உருவாக்கியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மகாராஷ்டிராவில் கேஸ்கள்
இப்போதைக்கு, இதுபோன்ற கேஸ்கள் நாக்பூர், யவத்மால், வாஷிம் மற்றும் புல்தானாவில் பதிவாகியுள்ளன. எனவே, சமீபத்தில் கோவிட்டிலிருந்து மீண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் இந்த நோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதைக் கண்காணிக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அறிகுறிகள்
MIS-C இன் அறிகுறிகள் என்ன தெரியுமா? உறுப்புகள் மற்றும் திசுக்களின் வீக்கம், காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், கடுமையான உடல் சோர்வு, வயிற்று வலி மற்றும் தோல் மற்றும் நகங்களின் நீல நிறமாற்றம் போன்றவை, கவனிக்க வேண்டிய அறிகுறிகளாகும். கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தால் கூட இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், எம்.ஐ.எஸ்-சி நோய்க்கான சிகிச்சையை செய்ய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சிகிச்சை கொடுக்கலாம்
ஆரம்பத்தில் நோயறிந்து சிகிச்சையளித்தால், சிகிச்சை எளிதானதாக இருக்கும். எனவே, கொரோனா பாதித்து மீண்டவர்கள், ஒரு மாத காலம் வரை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த காலகட்டத்தில் குழந்தைகள் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை அவர்கள் கண்காணிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications