டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம்.. ராஜ்ய சபாவில் நிறைவேறிய டெல்லி என்சிடி மசோதா.. கெஜ்ரிவால் ஷாக்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் முதல்வரை விட துணை நிலையில் ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா-2021 (என்சிடி மசோதா) நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் கடந்த சில வருடங்களாக துணை நிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையில் கடும் மோதல் நிலவி வருகிறது. டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் என்பது தொடர்பாக இங்கு கடும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது டெல்லியில் தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது.

NTC Delhi bill passed in Rajya Sabha: Kejriwal says it is a black day in democracy

டெல்லியில் முதல்வரை விட துணை நிலையில் ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா-2021 (என்சிடி மசோதா) நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக இனி முக்கிய முடிவுகளை எடுக்க துணை நிலை ஆளுநரிடம் முதல்வர் அனுமதி கேட்க வேண்டும்.

அதாவது முதல்வரிடம் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அங்கு முக்கிய முடிவுகள் எதுவாக இருந்தாலும் எடுக்கப்படும். இரண்டு நாட்கள் முன் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின் தற்போது மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது கடும் விவாதம் நடந்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்புகளை மீறி மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவிற்கு ஆதரவாக 83 பேரும் எதிராக 45 பேரும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது.. இந்த நாள் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருப்பு நாள். மக்களுக்கு தொடர்ந்து எங்களின் நலத்திட்டங்கள் தொடரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

English summary
NTC Delhi bill passed in Rajya Sabha: Kejriwal says it is a black day in Indian democracy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X