வேலைவாய்ப்பின்மை சதவீதம்.. அசத்தும் ஒடிசா அரசு.. கடைசி இடத்தில் அரியானா.. தமிழகத்திற்கு 15வது இடம்
டெல்லி : நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை சதவீதம் மிகக் குறைவாக உள்ள மாநிலங்களில் ஒடிசா மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில், அரியானா மாநிலம் கடைசியாக உள்ளது. அரியானாவில் 100ல் சுமார் 25 பேருக்கு வேலை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் உயர்ந்துள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் கடந்த சில மாதங்களுக்கு முன் கூறியது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை இழப்புகள் மற்றும் காரிப் பருவத்தின் விதைப்புப் பணிகள் முடிந்த நிலையில் வேலையின்மை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பின்மை சதவிகிதம்
கடந்த 2020ஆம் ஆண்டும் கொரோனா காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சதவிகிதம் ஜூலையில் 37. 6 சதவிகிதமாக இருந்தது. அதை ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதம் 37.5 சதவிகிதமாக குறைவாக உள்ளது. அது வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 8.4 ஆக உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு மார்ச் மாதத்தைவிட குறைவானது. கொரோனா பாதிப்புக்கு முந்தைய பிப்ரவரி, ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் 7.22 மற்றும் 7.76 சதவிகிதத்திற்கு இடையில் இருந்தது.

கொரோனா பாதிப்பு
தற்போது சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து நிலையில் தற்போது, கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இந்நிலையில் 2021ஆம் ஆண்டு நிலவரப்படி வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த அறிக்கையை பொருளாதார கண்காணிப்பு மையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி தற்போது நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை சதவீதம் மிகக் குறைவாக உள்ள மாநிலங்களில் ஒடிசா மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில், அரியானா மாநிலம் கடைசியாக உள்ளது. அரியானாவில் 100ல் சுமார் 25 பேருக்கு வேலை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார கண்காணிப்பு மையம்
இதுகுறித்து பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021ம் ஆண்டு செப்டம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் உள்ள நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகவும் குறைவாக உள்ள மாநிலமாக, நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ள ஒடிசா மாநிலம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 1.47 சதவிதமாகவும், மாநிலத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 39.96 சதவீதமாகவும் உள்ளது.

தமிழ்நாடு 15வது இடம்
வேலைவாய்ப்புன்மை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக அரியானா 25.7 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 24.5 சதவீதத்துடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் 22.8 சதவீதத்துடன் மூன்றாமிடத்தில் உள்ளது. தமிழகம் 5.5 சதவீதத்துடன் 15வது இடத்தில் உள்ளது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications