வெறும் 0.5% பேர் மட்டுமே கிராமப்புற பொதுச்சேவை மையங்கள் மூலம் தடுப்பூசிக்கு முன்பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கிராம்பபுற மக்கள் கோவின் இணையதளத்தில் தடுப்பூசிக்கு பதிவு செய்ய பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன்பு கூறியது. ஆனால் நாடு முழுவதும் கடந்த மூன்று மாதத்தில் மொத்தமே 3 லட்சம் பேர் பொது சேவை மையங்கள் மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது மொத்த எண்ணிக்கையில் 0.5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பொது சேவை மையங்களை பயன்படுத்தி உள்ளனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற பதிவுகளின்படி, ஜூன் 12 வரை 28.5 கோடி மக்கள் தடுப்பூசி பதிவு செய்துள்ளனர். 14.25 லட்சம் பேர் மட்டுமே பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) மூலம் பதிவு செய்திருந்தனர்.

Only 0.5% have booked for the vaccine through public service centers

பொது சேவை மையங்கள் செய்த மொத்த பதிவுகளின் எண்ணிக்கை மாதந்தோறும் ஓரளவு அதிகரித்துள்ள போதிலும், இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா இடையேயான இடைவெளியை இன்னும் எடுத்துக்காட்டுகிறது, மேலும் இது தடுப்பூசி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா என்ற கேள்விகளை எழுப்புகிறது.

மே 11 வரை, 54,460 பொதுசேவை மையங்கள் நாடு முழுவதும் உள்ளன. அவைகள் தடுப்பூசிக்காக வெறும் 1.7 லட்சம் பேரை மட்டுமே கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளார்கள். மே 11 நிலவரப்படி நாடு முழுவதும் தடுப்பூசிக்கு பதிவு செய்த 17 கோடிக்கும் மேற்பட்டவர்களில் 0.1 சதவீதம் பேர் மட்டுமே பொதுச்சேவை மையங்கள் மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்தவர்கள் ஆவர்.

சமீபத்திய தரவுகளின்படி (ஜூன் 12 வரை), நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் உள்ள பொது சேவை மையங்கள் இதுவரை அதிக எண்ணிக்கையிலான பதிவுகளை பதிவு செய்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான கிராமங்களைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில், கோ-வின் தளத்தில் 5,18,422 பேரை பொதுசேவை மையங்கள் பதிவு செய்துள்ளன, அதைத் தொடர்ந்து பஞ்சாப் 77,303 பேரைப் பதிவு செய்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டை யு, மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள பொது சேவை மையங்கள் முறையே 57, 10, 39, 58 மற்றும் 68 பேரை மட்டுமே பதிவு செய்துள்ளன.

கோவா 165, மணிப்பூர் 1,165, மேகாலயா 1,350; மிசோரம் 1,258; மற்றும் நாகாலாந்து 1,582, என்ற அளவிலேயே தடுப்பூசிக்காக பொதுச்சேவை மையங்கள் மூலம் பதிவு செய்துள்ளன. இந்த மாநிலங்களில் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை (தலா ஒரு டோஸ்) முறையே கோவா 6.57 லட்சம், மணிப்பூர் 5.43 லட்சம், மேகாலயா 5.16 லட்சம், மிசோரம் 3.57 லட்சம் மற்றும் நாகாலாந்து 3.48 லட்சம் ஆகும்.

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும் பொதுச்சேவை மையங்கள் கிராமப்புற-நகர்ப்புற டிஜிட்டல் கோரிக்கைகளை தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் முக்கியமான முனைகளாகக் காணப்படுகின்றன

கிராம-பஞ்சாயத்துகளில் செயல்படும் பொதுச்சேவை மையங்கள் பெரும்பாலும் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை அல்லது வங்கி கணக்குகளைத் திறப்பது போன்ற டிஜிட்டல் சேவைகளை மக்களுக்கு வழங்க உதவுகின்றன. இந்த சேவைகளைத் தவிர, சுமார் 1.4 லட்சம் பொதுச்சேவை மையங்களும் கிராமீன் மின்-கடைகளாக செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளன, இதன் மூலம் பெரிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களுக்கு நேரடியாக ஆர்டர்களை வழங்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+