பாஜகவுக்கு எதிரான கூட்டணி.. கெஜ்ரிவால் போடும் புது கணக்கு.. திட்டம் கை கொடுக்குமா? பரபர தகவல்
டெல்லி: பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் சூசகமாக பதில் தெரிவித்துள்ளார்.
வருகிற 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் உள்ளது.
ஆனாலும் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்த் தொடங்கியிருக்கிறது. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அசைக்க முடியாத பலத்துடன் பாஜக ஆட்சி செய்து வருகிறது.

பாஜகவை அகற்றிவிட போட்டி
வரும் 2024-ம் ஆண்டு தேர்தலிலும் ஆட்சி அமைத்துவிடலாம் என்ற திட்டத்துடன் பாஜக ஒருபக்கம் பணியாற்றி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் எப்படியாவது பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு ஆலோசித்து வருகின்றன. பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார், சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி ஆகியோர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் கணக்கு
ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுதும் வகையில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வருகின்றார். இதேபோல் டெல்லி, பஞ்சாபில் ஆட்சி அமைத்துள்ள கெஜ்ரிவால் குஜராத் தேர்தல் பக்கம் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். குஜராத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றாக ஆம் ஆத்மியை முன்னிறுத்திவிடலாம் என்பது கெஜ்ரிவாலின் கணக்காக உள்ளது என அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

அதிர்ச்சியில் பாஜக
இப்படி நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத்தொடங்கிவிட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கெஜ்ரிவால் ஆம் ஆத்மியின் செயல்பாடு உள்ளிட்டவற்றை குறித்து பேசினார். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் இதனால் விரக்தி அடைந்த பாஜக, வழக்குகளை போட்டு ஆம் ஆத்மி கட்சியை நசுக்க பார்ப்பதாகவும் விமர்சித்து பேசினார். மேலும், டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்த பாஜக அதில் தோல்வி அடைந்து இருப்பதாகவும் பேசியிருந்தார்.

இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை
குறிப்பாக வரும் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் கெஜ்ரிவால் பேசினார். கெஜ்ரிவால் பேசுகையில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என சூசகமாக பேசினார். மேலும் இந்தியாவை நம்பர் 1 நாடாக்கும் ஆம் ஆத்மியின் விஷன் கோஷம் மூலமாக 130 கோடி மக்களுடன் கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்துங்கள் என்று கட்சியினருக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.

குஜராத் தேர்தலே..
எதிர்க்கட்சிகளுடன் கூட்டணியில் கை கோர்ப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கெஜ்ரிவால் சூசகமாக பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தலின் முடிவை பொறுத்து கெஜ்ரிவாலின் அரசியல் நகர்வு இருக்கும் என்பதும் அரசியல் விமர்சர்களின் கருத்தாக உள்ளது.
-
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி












Click it and Unblock the Notifications