எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 80 வயது பெண்.. யார் இந்த மார்கரெட் ஆல்வா?
டெல்லி: எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வாவுக்கு தற்போது 80 வயது ஆகிறது. கர்நாடகத்தை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். முன்னாள் மத்திய அமைச்சரான இவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகவும், அதன்பிறகு ராஜஸ்தான், குஜராத், கோவா ஆளுநராகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டுள்ளார்.
இந்தியாவில் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் உள்ளார். துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு உள்ளார். இவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.
இதனால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்
இந்த தேர்தலில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். மேலும் துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மேற்கு வங்க மாநில ஆளுநராக உள்ளார்.

மார்கரெட் ஆல்வா தேர்வு
இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகள் சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து இன்று டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்கரெட் ஆல்வா யார்?
எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வா கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர். இவர் 1942ம் ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்த மார்கரெட் ஆல்வாவுக்கு தற்போது 80 வயது ஆகிறது. சட்டம் படித்திருந்த இவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். 1969ல் அரசியலில் இவர் நுழைந்தார். இந்திரா காந்தியின் தலைமையிலான காங்கிரஸில் (இந்திரா) செயல்பட்டார். 1975 1977 வரை காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலாளராக பணியாற்றினார். 1978 முதல் 1980 காலக்கட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக செயல்பட்டார்.

அரசியல் பதவி
காங்கிரஸ் சார்பில் 1974ல் முதல் முதலாக ராஜ்யசபா எம்பியாக தேர்வானார். அதன்பிறகு 1980, 1986 மற்றும் 1992 ஆண்டுகளிலும் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வானார். 1983 முதல் 1985 வரை ராஜ்யசபா துணை தலைவராகவும் இருந்தார். மேலும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 1984-85 காலக்கட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறை, இளைஞர் மற்றும் விளையாட்டு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராகவும் செயல்பட்டார். மேலும் 1999ல் கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். 2004ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

4 மாநிலங்களில் கவர்னர்
இருப்பினும் 2004 முதல் 2009 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக செயல்பட்டார். இந்த வேளையில் தான் அவர் உத்தரகாண்ட் மாநில முதல் பெண் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு 2012ல் ராஜஸ்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து குஜராத் மற்றும் கோவாவின் ஆளுநராகவும் செயல்பட்டார். இதில் 2014இல் அவர் குஜராத் மாநில ஆளுநராக ஒரு மாதமும் கோவா மாநில ஆளுநராக ஒரு மாதத்துக்கும் குறைவான வாரங்களுக்கும் பதவியில் இருந்தார்.

குடும்ப பின்னணி?
இவரது கணவர் நிரஞ்சன் ஆல்வா, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக அறியப்பட்டவர். இவர் 2018 ல் காலமானார். மார்கரெட் ஆல்வாக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். தற்போது மார்கரெட் ஆல்வா பெங்களூரில் வசித்து வருகிறார். சமீப காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications