குஜராத், இமாச்சல் தேர்தல்.. ஏன் “லேட்”? மோடிக்காகவா? தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம்
டெல்லி: குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்க காலதாமதம் செய்யப்பட்டதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் பார்க்கப்பட்டதா? என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத்தில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நிறைவடைகிறது.
இமாச்சல பிரதேசத்தில் 2023 ஜனவரி 8 ஆம் தேதி அரசின் பதவிகாலம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் நேற்று 2 மாநிலங்களின் தேர்தல் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

குஜராத் தேர்தல்
இதில் குறிப்பாக குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் உள்ள மக்களால் அதிகம் உற்று நோக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

2 கட்ட தேர்தல்
இருவருமே அடிக்கடி குஜராத்துக்கு சென்று அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், கட்சி நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும், நவம்பர் 12 ம் தேதி இமாச்சல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை
இரு மாநிலங்கலும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்கிடையே இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு இவ்வளவு குறுகிய இடைவெளிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தாமதமான முடிவு
குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று சுமார் 3 வாரம் கழித்து வாக்குகள் எண்ணப்படுவதும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. "தேர்தல் ஆணையம் சுயாதீன நிறுவனம். நேர்மையான முறையில் அது தேர்தலை நடத்த வேண்டும்." என காங்கிரஸ் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது.

பாஜக பதில்
காங்கிரஸின் ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்துள்ள பாஜக, "தோல்வியின் பயம்." என விமர்சித்து இருக்கிறது. அதேபோல் இரு மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது பல முறை ஒத்திவைக்கப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டதையும் முன்வைத்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மீது சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

மோடி பிரச்சாரம்
பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதற்கு முன்பே குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை செய்து முடிக்க தேர்தல் ஆணையம் வழி ஏற்படுத்திக் கொடுப்பதைபோல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications