டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேளாண் சட்டம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக அறிக்கை உண்மைக்கு புறம்பானது- ப.சிதம்பரம் விமர்சனம்

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவையிலும் மாநிலங்களவையிலும் முழு விவாதங்கள் நடத்தப்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டுத்தான் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 70 நாட்களாக வேளாண் சட்டங்கள் குறித்து லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகளுக்கு சாதகமான விஷயங்கள் ஏதும் நடைபெறவில்லை.

P. Chidambaram says MEA statement is Travesty of Truth

இதையடுத்து கடந்த மாதம் 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் கடந்த 29-ஆம் தேதி முதல் 2-ஆம் தேதி வரை இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

விவசாயிகளின் பிரச்சினை குறித்து ஹாலிவுட் பாப் பாடகி ரிஹான்னா, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட குரல் எழுப்பினர். இதை மத்திய அரசும், இந்திய பிரபலங்களும் கண்டித்தனர். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் உண்மை தெரியாமல் எந்த விவகாரம் குறித்து பேசக் கூடாது.

டெல்லி போலீஸ் வழக்கு- 'நோ' மிரட்டல்- விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவுதான்- கிரேட்டா தன்பெர்க் ட்வீட்டெல்லி போலீஸ் வழக்கு- 'நோ' மிரட்டல்- விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவுதான்- கிரேட்டா தன்பெர்க் ட்வீட்

வேளாண் சட்டங்கள் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு அனைவருடன் ஆலோசிக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்துள்ளது. இது உண்மைக்கு புறம்பானது என ப சிதம்பரம் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முழு ஆலோசனை நடந்தது போல் ராஜ்யசபா பதிவுகளில் எதுவும் இல்லை. அதுகுறித்த வீடியோக்களும் இல்லை. ராஜ்யசபா எம்பிக்கள் சிலரின் மைக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. வாக்கெடுப்பும் நிராகரிக்கப்பட்டது.

வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுவது போல் முழு விவாதம் நடத்தப்பட்டிருந்தால் அதற்கான பதிவுகள் எங்கே? இந்த அமைச்சகத்தின் அறிக்கையை யார் நம்புவார்கள்? என சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Ex Minister P .Chidambaram says that MEA statement on farm laws are travesty of Truth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X