மண்டை மேல் இருந்த கொண்டைய மறந்த பாக். மீடியா! IAF பற்றி புரளி.. இப்படித்தான் சந்தோசபட்டுப்பாங்க போல
டெல்லி: இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. ஆனால், அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் அவசர அவசரமாக பழைய படங்களை எடுத்து, பாக். பதிலடி என்று வதந்தியை பரப்பி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இதனை இந்தியா மேற்கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இந்திய தாக்குதல் எல்லை தாண்டாமல் இருந்திருக்கிறது. அதாவது எல்லையை தாண்டாமல், இந்தியாவிலிருந்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படை என முப்படையும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனால் பாக் ராணுவம் நிலை குலைந்து போயிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டிருக்கிறது. ராணுவ தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
ஏற்கெனவே இன்று நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு இந்தியா அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்திய ராணுவம் தாக்குதலுக்கு ஷெல்களை பயன்படுத்தியுள்ளது. அதாவது பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சக்தி வாய்ந்த குண்டுகள் டார்கெட் பகுதிகள் மீது வீசப்பட்டிருக்கின்றன. இதனால் கராச்சியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது. தற்போது எல்லையில் அவர்களும் ஷெல் தாக்குதலை தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் மறுபுறம் 5 இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கொக்கரித்து வருகின்றன. விஷயம் என்னவெனில் பாக். ஊடகங்களில் வெளியான படங்கள் அனைத்தும் பழையவை. இதை வைத்துதான் அவர்கள் சுய திருப்தி அடைந்து வருகிறார்கள். பாக். மீடியாக்களின் தில்லுமுல்லை பிரபல ஃபேக்ட் செக் ஊடகவியலாளரான முகமது ஜுபைர் வெளி கொண்டு வந்திருக்கிறார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications