Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று ரிசல்ட்! நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெறும் பிரதமர் மோடி? எதிர்க்கட்சிகள் பலம் என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 2 நாட்கள் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வந்தன. இன்று பிரதமர் மோடி பதிலுரை வழங்குவதோடு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் ரிசல்ட் வெளியாகும். இதில் பிரதமர் மோடியின் அரசு வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி நாடாளுமன்றத்தில் எதுவும் பேசவில்லை.

Parliament Monsoon Session: what was the acctual number for NDA government to alive after No-Confidence Motion

இதனால் லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் இந்த தீர்மான நோட்டீசை சபாநாயகரிடம் வழங்கினார். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதம் நேற்று 2வது நாளாக நடந்தது.

நேற்று முன்தினத்தை விட நேற்றைய விவாதம் என்பது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பெரிய தலைவர்கள் நேற்று பேசி ஒருவருக்கொருவர் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

ராகுல் காந்தி பேசும்போது, ‛‛மணிப்பூர் மக்களை 2 துண்டாக பிரித்து விட்டீர்கள். மணிப்பூர் மக்களை கொன்றதன் மூலம் பாரதமாதாவை கொன்றுவிட்டனர்'' என கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு ஸ்மிருதி இரானி பேசியபோது ‛‛மணிப்பூர் இந்தியாவில் தான் உள்ளது. அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாரதமாதாவை எதிர்க்கட்சிகள் அவமானப்படுத்தி உள்ளனர்'' என்றார். மேலும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது ஏற்பட்ட வன்முறைகளை அவர் பட்டியலிட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‛மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துவதை மத்திய அரசு தவிர்ப்பதாக பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. நாங்கள் விவாதத்துக்கு முதல் நாளே தயாராக தான் ிரந்தோம். மணிப்பூரில் கடந்த 6 ஆண்டுகளாக ஊரடங்கு இல்லை. பயங்கரவாதம் முடிந்துவிட்டது. மணிப்பூரில் நடந்த சம்பவம் வெட்கக்கோடானது. அதை அரசியல் செய்வது இன்னும் வெட்கக்கேடானது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொள்கிறேன்'' என ஆக்ரோஷமாக 2 மணிநேரம் பேசினா். அதன்பிறகு மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்ற சபை இன்று காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய தினம் பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்க உள்ளார். இந்த வேளையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நோக்கத்தை பிரதமர் மோடி கடுமையாக விமர்சிக்கலாம். அதோடு மணிப்பூர் விவகாரத்தின் பின்னணியில் உள்ள அரசியல் குறித்தும் மோடி பேசலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். நிரூபிக்காவிட்டால் ஆட்சியில் தொடர முடியாத சூழல் உருவாகும். ஆனால் தற்போதைய நிலவரப்படி மத்திய பாஜக அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

அதாவது நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியாக இருக்க 272 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். இருப்பினும் தற்போது நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பாஜகவுக்கு 303 எம்பிக்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் என்டிஏ எனும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 331 எம்பிக்கள் உள்ளன. மாறாக 26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 144 எம்பிக்கள் மட்டுமே உள்ளன. இதுதவிர பாஜக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இல்லாத தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவின் பிஆர்எஸ் கட்சி, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசாவின் நவீன் பட்நாயக் உள்ளிட்டவர்களுக்கு 70 எம்பிக்கள் உள்ளன.

அதன்படி பார்த்தால் மத்திய அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது நிச்சயம் தோல்வியடையும். இது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்கு தெரியும். இருப்பினும் கூட அதன் மீதான விவாதத்தில் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து பிரதமர் மோடி பேச வைக்க வேண்டும் என்பதே விவாதிக்க வைக்கலாம் என்பதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+