4 நாட்கள்தான் டைம்.. ஜூலை 31க்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய கெடு.. ரூ.5000 அபராதம்.. தவிர்ப்பது எப்படி?
டெல்லி: 2021-22 நிதியாண்டு அல்லது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வரியை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என வருமான வரித்துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு வருமான வரி செலுத்த டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஐடிஆர்
வழக்கமாக ஜூலை 31 வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாகும். இந்நிலையில் நடப்பாண்டில் வரியை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி தாக்கல் செய்வது அடிப்படையான கடமையாகும். வருடத்திற்கு ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் எல்லாருமே வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்சவரம்புக்கு கீழ் வந்தாலும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது அவசியமாகும்.

வருமான வரி
ஒருவர் முன்னதாகவே வருமான வரி தாக்கல் செய்துவிட்டால், அதற்கு நிறைய சலுகைகளையும் அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வருமான வரி சட்டம் 234 ஏ,பி மற்றும் சி பிரிவின் கீழ், வட்டி விகிதம் மற்றும் 234 எஃப் பிரிவின் கீழ் தாமதமாக தாக்கல் செய்ததற்கான கட்டணத்தை தவிர்க்க இயலும். ஆனால், சில காரணங்களால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வரி தாக்கல் செய்ய முடியாதபோது, சில சிக்கல்களும் வரக்கூடும். மாதத்திற்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி, அதற்கு வரியுடன் செலுத்த வேண்டும்.

வரி
தாமத கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க வருமான வரித்துறையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பாக எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலையும் அனுப்புகிறது. அதன்படி ஜூலை 26 வரை அதாவது நேற்று வரை 3.4 கோடிக்கும் அதிகமானோர் வரி தாக்கல் செய்துள்ளனர். 26ம் தேதி மட்டும் 30 ஐடிஆர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

எவ்வளவு
அதேபோல நீங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் அளவில் வருமானம் கொண்டவர் எனில் வருமான வரி செலுத்துவதற்கான கடைசி தேதியை தவறவிட்டுவிட்டீர்களானால், ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும். உங்கள் வருமானத்திற்கு ஏற்றபடி வரி செலுத்தி அதை இ வெரிஃபிகேஷன் செய்ய வேண்டியது அவசியம். கூடுதல் பிடித்தத்தை refund பெறவும் இது உதவியாக இருக்கும்.எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரியை செலுத்திவிடுங்கள். அபராத தொகையை தவிருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications