அரசியல்வாதிகள் மாறிவிடுவார்கள்... சிபிஐ மீதான நம்பிக்கை குறைகிறது - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
டெல்லி: அரசியல்வாதிகள் நேரம் வரும்போது மாறிவிடுவார்கள் என்றும், அதிகாரிகள்தான் நிரந்தரமானவர்கள் எனவும் சிபிஐ குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர், "ஆட்சி அதிகாரத்துக்கு வரும் அரசியல் பிரதிநிதிகள் நேரம் வரும்போது மாறிவிடுவார்கள். ஆனால், சி.பி.ஐ. போன்ற புலனாய்வு நிறுவனங்கள் நிரந்தரமானவை.
அவற்றில் யாராலும் தலையிட முடியாது. அவை சுதந்திரமானவை. உங்கள் வேலைக்கு நேர்மையாக இருப்பேன் என உறுதி கூறுங்கள். சகோதரத்துவமே உங்கள் பலம்." என்றார்.

சிபிஐ மீது நம்பிக்கை குறைந்து வருகிறது
சிபிஐ குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை சுட்டிக்காட்டிய என்.வி.ரமணா, "ஆரம்பத்தில் சிபிஐ மீது பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், சமீப காலமாக சிபிஐ மீதான நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. உண்மையை சொல்லப்போனால் பல்வேறு நீதிமன்றங்களில் சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்ற வழக்குகள் நிரம்பி வழிகின்றன. சிபிஐ குறித்து முன்வைக்கப்பட்டும் விமர்சனங்களை சுட்டிக்காட்டிய என்.வி.ரமணா, "ஆரம்பத்தில் சிபிஐ மீது பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், சமீப காலமாக சிபிஐ மீதான நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. உண்மையை சொல்லப்போனால் பல்வேறு நீதிமன்றங்களில் சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்ற வழக்குகள் நிரம்பி வழிகின்றன.

சிபிஐ ரகசியம் காக்கிறது
ஆனால், காலப்போக்கில் மற்ற புலனாய்வு நிறுவனங்களை போன்றே சி.பி.ஐ.-யும் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. சி.பி.ஐ-யின் ஒவ்வொரு நகர்வுகளின் அடிப்படையிலும் அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சிபிஐ விசாரணைகள் தொடர்பாக அதிகளவில் ரகசியம் காப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சிபிஐ தலைவரை தேர்ந்தெடுக்க ஆணையம் வேண்டும்
சிபிஐ அமைப்பிற்கு என தனி விதிகள் தேவைப்படுகின்றன. அதில், அதன் செயல்பாடுகள், அதிகாரங்கள், எல்லைகள் வகுக்கப்பட்டு இருக்க வேண்டும். சிபிஐக்கு தலைவரை தேர்ந்தெடுக்க பாரபட்சம் பார்க்காத சுதந்திரமான ஆணையத்தை அமைக்க வேண்டும். அதில் பலதுறைகளை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும்." என்றார்.

ஆங்கிலேயர் காலத்திலேயே போலீஸ் இப்படிதான்
காவல்துறை பற்றி பேசிய என்.வி.ரமணா, "அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் காவல்துறை தவறாக பயன்படுத்தப்படுவது புதிது அல்ல. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்திலிருந்தே இந்நிலை நீடித்து கொண்டிருக்கிறது. போலீசார் பாரபட்சம் பார்க்காமல் செயல்பட வேண்டும். ஜனநாயக அம்சங்களை நிலைநிறுத்தி வலுப்படுத்த வேண்டும். எந்தவிதமான சர்வாதிகாரப் போக்கையும் காவல்துறை கையில் எடுக்கக்கூடாது. இதிலிருந்து தடம் மாறிச்செல்வது ஜனநாயகத்தையே பாதிக்கும்." என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications