"குடி"மக்களின் மூளையே மூளை.. வாட்டர் பாட்டிலை வைத்து.. சரக்கு பாட்டிலுக்கு இடம் பிடித்த சமயோஜிதம்!
டெல்லி: மதுபான கடைகள் முன்பாக நாடு முழுவதும் இன்று 2-வது நாளாகவும் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதற்காக குடிநீர் பாட்டில்கள், ஹேண்ட் பேக் ஆகியவற்றை வைத்து இடம் போட்டு வைத்த கூத்தும் அரங்கேறி உள்ளது.
Recommended Video
லாக்டவுன் அமலில் இருந்த போதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் பல மாநிலங்களில் மதுபான கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன.
|
போலீஸ் தடியடி
40 நாட்களாக மூடியிருந்த மதுபான கடைகள் திறந்ததுதான் தாமதம்.. குடிமகன்கள் தாகத்தை தீர்க்க மதுபான கடைகள் முன்பு பெருந்திரளாக திரண்டனர். பல இடங்களில் அடிவாங்கி மிதிபட்டு மது பாட்டில்களை வாங்கியும் சென்றனர் குடிமகன்கள்.

கவலையில்லாத கூட்டம்
டெல்லியில் ஆளும் கெஜ்ரிவால் அரசு அதிரடியாக நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. டெல்லியில் மதுபான விலை 70% அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் 2-வது நாளாக இன்றும் டெல்லியில் மதுபான கடைகள் முன்பு கூட்டம் காலை முதலே களைகட்டியது.
|
குடிமகன்களுக்கு மரியாதை
டெல்லி லக்ஷ்மி நகர் பகுதியில் ஆண்களும் பெண்களும் காலை முதலே வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் வரிசையில் எந்த இடத்தில் நிற்கிறார்கள் என்பதை அவர்களது கைகளில் எழுதியிருந்தனர். டெல்லியின் இன்னொரு பகுதியில் குடிமகன்கள் அரசுக்கு வருவாயை தருகிறவர்கள் என்பதால் அவர்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் குடிமகன் ஒருவர்.
|
இப்படியும் இடம்பிடிக்கிறாங்களாம்
கர்நாடகாவில் மதுபான கடை ஒன்றின் முன்பாக விசித்திர காட்சி அரங்கேறி இருந்தது. ஹெல்மெட், வாட்டர் பாட்டில், செருப்பு ஆகியவற்றை வைத்து மதுபான கடை வரிசைகளில் இடம்பிடித்தனர். சிலர் வரிசையில் எப்போது கடை திறக்கும் என காத்திருந்தபடியே பரிதாபமாக அமர்ந்தும் இருந்த காட்சியும் அரங்கேறியது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications