டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ஜனாதிபதியாக என்னை நியமனம் செய்யணும்'.. மனு தாக்கல் செய்தவருக்கு அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜனாதிபதியாக தன்னை நியமனம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கிஷோர் ஜெகன்னாத் என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் பதிவாளருக்கு அதிரடி உத்தரவையும் பிறப்பித்தது.

நமது நாட்டின் நீதி பரிபாலனையில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு உச்ச நீதிமன்றமே ஆகும்.

மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு.. பதவிப்பிரமாணம் செய்துவைத்த ஜனாதிபதி திரெளபதி முர்மு! துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு.. பதவிப்பிரமாணம் செய்துவைத்த ஜனாதிபதி திரெளபதி முர்மு!

 உச்சப்பட்ச அதிகாரம்

உச்சப்பட்ச அதிகாரம்

அதேபோல், நாட்டில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள், அரசியல் சாசனம் தொடர்பான வழக்குகள் வரை தீர்வு காணப்படுவது உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே. மாநில நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து நிவாரணம் பெறப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் முதல் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு தீர்வு காணப்படுகிறது. இந்திய அரசியல் சட்டப்பிரிவின் படி நாட்டின் உச்சப்பட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றம் இதுவேயாகும்.

ராமர் கோவில் வழக்கு

ராமர் கோவில் வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் நாள்தோறும் பல வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் உள்பட பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படுகின்றன. ராமர் கோவில் பிரச்சினை உள்பட மிகவும் பதற்றமான வழக்குகளுக்கு கூட உச்ச நீதிமன்றத்தில் தான் தீர்வு காணப்பட்டது. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் உச்ச நீதிமன்றம் இயங்கி கொண்டு இருக்கும் நிலையில், கிஷோர் ஜெகன்னாத் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு அற்பத்தனமானது

இந்த மனு அற்பத்தனமானது

அவர் தனது மனுவில் ஜனாதிபதியாக தன்னை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை பார்த்து அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இந்த மனு அற்பத்தனமானது, இழிவானது என்றும் நீதிமன்ற நடைமுறைகளை தவறாக பயன்படுத்தும் வகையிலும் உள்ளது என்று காட்டமாக தெரிவித்தனர்.

இழிவான கருத்துகளை அகற்றவும்

இழிவான கருத்துகளை அகற்றவும்

கிஷோர் ஜெகன்னாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், வரும் காலங்களில் இந்த விவகாரத்தில் அவரது மனுக்ககளை ஏற்கக் கூடாது என்றும் பதிவாளரை கேட்டுக்கொண்டனர். ஜெகன்னாத் சாவத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள இழிவான கருத்துக்களை அகற்ற வேண்டும் என்றும் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

 இப்படி மனு தாக்கல் செய்வது முறையல்ல

இப்படி மனு தாக்கல் செய்வது முறையல்ல

முன்னதாக மனுதாரரான ஜெகன்னாத் சாவந்த் நேரடியாக ஆஜராகி, அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் தான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால் அனைத்து சிக்கலான சூழல்களுக்ககாகவும் பாடுபடுவேன் என்றும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம், ''சுற்றுசூழல் ஆர்வலர் என்பதால் அவர் தனக்கு அறிந்த துறை பற்றி பேசலாம். ஆனால், இப்படி மனு தாக்கல் செய்வது முறையல்ல'' என்று தெரிவித்தது.

English summary
The Supreme Court dismissed the petition filed by Kishore Jagannath in the Supreme Court seeking his appointment as the President and issued an action order to the Registrar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X