பிஎம் கிசான் பயனாளிகள் குறைப்பு? விவசாயிகளின் உரிமையை பறித்து யாருக்கு உதவுறீங்க? - கார்கே விளாசல்!
டெல்லி : விவசாயிகளின் உரிமையை பறிப்பதன் மூலமாக நீங்கள் யாருக்கு பலன் அளிக்கிறீர்கள்? என பாஜக அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மூன்று தவணைகளாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை, மூன்று ஆண்டுகளில் 67% குறைந்திருப்பது ஆர்டிஐ தகவல் மூலம் வெளிப்பட்டுள்ளது.

பிஎம் கிசான்
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2,000 வீதம் 5 ஏக்கருக்கு குறைவாக வைத்திருக்கும் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

ஆர்டிஐ தகவல்
இந்தத் திட்டம் குறித்து சமூக செயற்பாட்டாளர் கன்னையா குமார் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ மனுவுக்கு மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அளித்திருக்கும் பதில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் முதல் தவணை மானியம் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், 11-வது தவணையில் மானியம் பெற்றவர்கள் எண்ணிக்கை 67% சரிந்துள்ளது.

பயனாளிகள் எண்ணிக்கை கடும் சரிவு
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2019-ல் பயனாளிகள் எண்ணிக்கை 11.84 கோடியாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு மே - ஜூன் மாதங்களில் வழங்கப்பட்ட 11-வது தவணையில் பயன்பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 3.87 கோடியாக குறைந்துள்ளது. குறிப்பாக, ஆறாவது தவணைக்கு பிறகு இந்த எண்ணிக்கை வேகமாக சரிவை நோக்கி சென்றிருக்கிறது.

67% குறைவு
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பதிவில் இதுதொடர்பாக மத்திய பாஜக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். பயனாளிகளின் சரிவை விளக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், உணவு வழங்கும் மக்களின் உரிமையை பறிப்பது தான் மோடி அரசின் கொள்கை. பிரதமரின் கிசான் திட்டத்தின் முதல் தவணை கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட போதிலிருந்து தற்போது 67 சதவீதம் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.

யாருக்கு பலன்?
அதாவது பயனாளிகள் எண்ணிக்கை 11.87 கோடியில் இருந்து கடைசியாக மே மாத தவணை வழங்கப்பட்ட போது பயனாளிகள் எண்ணிக்கை 3.87 கோடியாக சரிந்துள்ளது. ஒவ்வொரு தவணைக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது தான் உண்மை. விவசாயிகளின் உரிமையை பறிப்பதன் மூலமாக நீங்கள் யாருக்கு பலன் அளிக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications