மோடியின் பர்த்டே ஸ்பெஷல்! ஓடுறது-தாவுறதுனு தட்டில் வரும்! 56 ஐட்டம்! பணமழை
டெல்லி: நாளை பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் நாளை முதல் வரும் 26ம் தேதி வரை 56 வகை உணவுகளை வெறும் 40 நிமிடத்தில் சாப்பிடும் தம்பதிக்கு ரூ.8.50 லட்சம் பரிசாக வழங்கப்படுவதுடன், பிரதமர் மோடிக்கு பிடித்த இடமான கேதார்நாத்துக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை பிறந்தநாளாகும். பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை பாஜகவினர் விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் நலத்திட்டங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதோடு நாளை பிறக்கும் குழந்தைகளுக்கு சில இடங்களில் தங்க மோதிரம் வழங்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

தனியார் உணவகம் ஸ்பெஷல்
இந்நிலையில் தான் தனியார் உணவகம் ஒன்று மோடி பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் ஆபர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த உணவகம் நாளை முதல் வரும் 26ம் தேதி வரை பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி ‛56 இன்ச் மோடிஜி' என்ற பெயரில் 56 வகையான உணவுகள் அடங்கிய தாலியை வழங்குகிறது.

40 நிமிடத்தில் சாப்பிட்டால் பரிசு
இந்த தாலியில் அசைவ பிரியர்கள், சைவ பிரியர்களுக்கு ஏற்ப உணவுகள் இருக்கும். இந்த 56 உணவுகள் அடங்கிய தாலியை தம்பதியாக சேர்ந்து வெறும் 40 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிடும் தம்பதிகளுக்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். மேலும் அதில் தேர்வு செய்யப்படும் தம்பதி கேதார்நாத்துக்கு சுற்றுலாவும் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

மோடியால் பெருமை
இந்த ஆபரை டெல்லி ARDOR 2.1 என்ற பெயரிலான உணவகம் தான் வழங்கி உள்ளது. இதுபற்றி அதன் உரிமையாளர் சுமித் கரலா கூறுகையில், ‛‛எனக்கு பிரதமர் மோடி மீது நிறைய மரியாதை உள்ளது. அவரால் நாடு மிகவும் பெருமையடைந்துள்ளது. இதனால் அவரது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தேன்.

இதுதான் என் ஆசை
நாங்கள் அறிமுகம் செய்துள்ள இந்த தாலிக்கு ‛56 இன்ச் மோடிஜி' என்ற பெயரரிட்டுள்ளோம். இதனை பிரதமர் மோடி சாப்பிட வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால் அவரால் இங்கு வர முடியாது. இதனால் பிரதமர் மோடியை விரும்பும் நபர்களுக்காக இந்த ஆபரை வழங்குகிறோம். வெற்றியாளர்களுக்கு மொத்தம் ரூ.8.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. அதோடு கேதார்நாத் சுற்றுலாவுக்கும் அழைத்து செல்ல உள்ளோம் '' என்றார்.













Click it and Unblock the Notifications