டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயல்களை தீரமாக எதிர்கொண்டவர்களுக்கு சல்யூட்.. உறவினர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்.. பிரதமர் மோடி உரை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவிற்கு இடையே டவ் தே, யாஸ் போன்ற புயல்களும் தாக்கி உள்ளன, மக்கள் அதை துணிவாக எதிர்கொண்டனர் என்று பிரதமர் மோடி மன் கி பாத் உரையில் இன்று பேசினார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து புயல் தாக்கியது. அரபிக்கடலை ஒட்டியுள்ள கேரளா, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை டவ் தே புயல் தாக்கியது. வங்க கடலில் உள்ள ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களை யாஸ் புயல் தாக்கியது.

இந்த நிலையில் இன்று மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி இந்த புயல் பாதிப்பு குறித்தும் மக்கள் அதை எதிர்கொண்ட விதம் குறித்தும் பேசினார்.

ஆக்சிஜன் தேவை.. கொரோனா பரவலை முழுபலத்தோடு இந்தியா எதிர்கொள்கிறது.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரைஆக்சிஜன் தேவை.. கொரோனா பரவலை முழுபலத்தோடு இந்தியா எதிர்கொள்கிறது.. மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரை

பேச்சு

பேச்சு

பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், இந்தியாவில் கொரோனாவிற்கு இடையே டவ் தே, யாஸ் போன்ற புயல்களும் தாக்கி உள்ளன. பல மாநிலங்களில் புயல் மீட்பு பணிகள், நிவாரண முகாம்களில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுக்கள். கொரோனாவிற்கு இடையிலும் மக்கள் தீரத்தோடு புயலை எதிர்கொண்டார்கள்.

புயல்

புயல்

புயலை எதிர்கொண்டவர்களுக்கும், ஒற்றுமையாக இக்கட்டான காலத்தில் கரம் கோர்த்த எல்லோருக்கும் என்னுடைய சல்யூட். புயல் பாதிக்கப்பட்ட பல்வேறு மாநில மக்கள் மிகவும் துணிச்சலாக செயல்பட்டனர்.

போராட்ட குணம்

போராட்ட குணம்

இந்திய மக்களின் போராட்ட குணத்தை உணர முடிந்தது. புயலில் உறவினர்களை இழந்தவர்களுக்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். அவர்களின் குடும்பங்களோடு நான் துணை நிற்கிறேன். உங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

இரங்கல்

இரங்கல்

எனது தலைமையிலான அரசு இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 7 வருடம் மக்களின் தேவைகளை மனதில் வைத்து ஆட்சி நடத்தி இருக்கிறோம். எனது தலைமையிலான அரசு 'சப் கி சாத், சப் கி விகாஸ்' என்பதை மனதில் வைத்து செயல்பட்டோம். மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது, என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

English summary
PM Modi condolences to people who lost their relatives in Tauktae and Yaas cyclones in his Maan Ki Baat speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X