டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை செல்கிறார் மோடி... அதிபர் சிறிசேனா நேரில் அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றதில் இருந்து 44 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நரேந்திர மோடி. இந்த பயணத்தின் போது, முக்கிய நாடுகளுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

அதில், முதன் முறையாக, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்ஜியேல் வாங்சங்கின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி. அப்போது, இந்தியாவிலிருந்து பூடானுக்கு பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மோடி-சிறிசேனா சந்திப்பு

மோடி-சிறிசேனா சந்திப்பு

இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று சந்தித்து உரையாடினார். அப்போது, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடிக்கு சிறிசேனா தனது வாழ்த்துக்களை கைகுலுக்கி தெரிவித்தார்.இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலத்தீவு பயணம்

மாலத்தீவு பயணம்

பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு நாட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். வருகிற 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அவர் மாலத்தீவு பயணத்தை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

சமீபத்தில் மாலத்தீவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அங்கு சீனாவின் கை ஓங்கும் வகையில் இருந்தது. ஆனால், அங்கு நினைத்தப்படி இல்லாமல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோடி அங்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வளர்ச்சி திட்டப்பணிகள்

வளர்ச்சி திட்டப்பணிகள்

மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தெரிய வந்துள்ளது. இலங்கையில் சில மணி நேரம் மட்டுமே மோடி தங்கி இருப்பார் என்றும், இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்வார் எனவும் கூறப்படுகிறது. சீனா ஆதிக்கம் செலுத்த நினைக்கும் நிலையில், மோடி நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்துவது, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Prime Minister Modi will travel to Sri Lanka on the way back From Maldives and return to India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X