உலக தலைவர்களில் நம்பர் ஒன்.. யூடியூபில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற பிரதமர் மோடி.. ஜோ பைடன் எந்த இடம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி யூடியூப் சேனலில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களுக்கு மேல் பெற்று உலக தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ, யூடியூப் சேனலில் 36 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த நவீன யுகத்தில் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் அரசின் திட்டங்கள், அரசியல் தலைவரின் கருத்துகள் குறித்து ரேடியோவில், பத்திரிகைகள் வாயிலாக செய்திகள் வந்த நிலையில் இப்போதோ டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.

சமூக வலைத்தளங்களின் காலம்
மாறி வரும் காலத்துக்கு ஏற்ப அனைத்து அரசியல் தலைவர்களும் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்களில் அக்கவுண்ட் வைத்துள்ளார். அடிக்கடி இதில் அப்டேட்களை செய்கின்றனர். சமூக வலைத்தளங்களில் அதிக லைக், அதிக பாலோயர்ஸ் மற்றும்அதிக சப்ஸ்கிரைபர்கள் பெறும் தலைவர்களே செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

1 கோடி சப்ஸ்கிரைபர்கள்
இந்த வகையில் பிரதமர் மோடியும் டுவிட்டர், பேஸ்புக்கில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். 'நரேந்திர மோடி' என்ற பெயரில் யூடியூப் சேனலிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் யூடியூப் சேனலில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளார். சுமார் 10 மில்லியன் பேர் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளார். பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 1,643,140,189 வியூஸ்களை பெற்றுள்ளது.

உலக அளவில் முதலிடம் பிடித்த மோடி
கடந்த 2007-ல் குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது மோடி இந்த சேனலை உருவாக்கியிருந்தார். தற்போது உலக நாடுகளின் தலைவர்களில் யூடியூப் சேனலில் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற தலைவராக தொடர்ந்து முதலிடத்தில் பிரதமர் மோடி நீடித்து வருகிறார். கடந்த 2019-ல் 'நரேந்திர மோடி' சேனலை 70 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்திருந்தனர். 2019-ம் ஆண்டு சந்திரயான் 2 திட்டம் தோல்வியில் முடிந்தபோது, அப்போதைய இஸ்ரோ தலைவர் கே சிவனை, பிரதமர் மோடி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறியது, மோடியின் கொரோனா தொடர்பான பேச்சுகள், நடிகர் அக்ஷய் குமார் உடனான பிரதமரின் ஆகியவை அதிக பார்வையாளர்களை ஈர்த்தது.

ஜோ பைடன் எத்தனை?
உலக தலைவர்களில் மோடிக்கு அடுத்ததாக பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ, யூடியூப்சேனலில் 36 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், 30.7 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்று 3-ம் இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 7.043 லட்சம் சப்ஸ்கிரைபர்களை மட்டுமே பெற்றுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எத்தனை சப்ஸ்கிரைபர்கள்?
தேசிய தலைவர்களுடன் ஒப்பிடும்போதும் பிரதமர் மோடியே முதலிடத்தில் உள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் யூடியூப் சேனலுக்கு 5.25 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். சசி தரூருக்கு 4.39 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு 2.12 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு 1.37 லட்சம் சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர். பிரதமர் மோடியை தற்போது ட்விட்டரில் 7.53 கோடி பேரும், இன்ஸ்டாகிராமில் 6.5 கோடி பேரும், முகநூலில் 4.6 கோடி பேரும் பின்தொடர்ந்து (Followers) வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications