3-வது அலையை சமாளிக்க.. போதிய ஆக்சிஜன் இருக்கிறதா? .. அதிகாரிகளுடன், மோடி அதிமுக்கிய மீட்டிங்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 3-வது அலை விரைவில் வரலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் 3-வது அலையில் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பு 2-வது அலையால் நாடு பட்ட சிரமத்தை எளிதில் மறந்து விட முடியாது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு அதிகமாக இருந்ததால் ஆக்சிஜன் சிகிச்சை தேவையாக இருந்தது. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

மோடி ஆலோசனை

மோடி ஆலோசனை

பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் ஏராளமானோர் உயிரிழந்து போனார்கள். அதன்பின்பு நாட்டில் ஆக்சிஜன் தேவையை சமாளிக்க ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்பட்டன. இந்த நிலையில் 3-வது அலை விரைவில் வரலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் 3-வது அலையில் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

 ஆக்சிஜன் இருப்பு எவ்வளவு?

ஆக்சிஜன் இருப்பு எவ்வளவு?

ஆக்சிஜன் இருப்பு, உற்பத்தி நிலவரம் ஆகியவை குறித்தும் ஆலோசனை நடந்தது.. இதில் அரசு அதிகாரிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். போதுமான ஆக்சிஜனை இருப்பு வைத்திருப்பது, தேவைப்படும் போது உற்பத்தியை உடனடியாக செய்வது உள்ளிட்டவை பற்றி விரிவான ஆலோசனைகளை பிரதமர் மோடி அதிகாரிகளிடம் வழங்கினார்.

1,500 ஆக்ஸிஜன் ஆலைகள்

1,500 ஆக்ஸிஜன் ஆலைகள்

இந்தியா முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவை நான்கு லட்சத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜனேற்ற படுக்கைளை பூர்த்தி செய்ய உதவும் என்று பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆலைகள் விரைவாக செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தவும், அதற்காக மாநில அரசுகளுடன் நெருக்கமாக பணியாற்றவும் அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தினார்.

Recommended Video

    India-வில் Coronavirus 3rd Wave அடுத்த மாதம் ஏற்படலாம்.. SBI வல்லுநர் குழு எச்சரிக்கை
     பயிற்சி அவசியம்

    பயிற்சி அவசியம்

    ஆக்ஸிஜன் ஆலைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். இதற்காக வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பயிற்சி தொகுதி இருப்பதாகவும், நாடு முழுவதும் சுமார் 8000 பேருக்கு பயிற்சி அளிப்பதை அவர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் அவருக்குத் தெரிவித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+