ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட.. விமான நிலைய முனையம்! பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
டெல்லி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள லோகப்பிரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட 'தி பேம்பூ ஆர்க்கிட்ஸ்' முனையம், பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டது. மிகக் குறைந்த காலத்தில், அதாவது ஓராண்டுக்குள்ளாகவே செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த நவீன வசதிகள் கொண்ட முனையம், வடகிழக்கு மாநிலங்களின் விமான இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.
விமான முனையத்தின் வடிவமைப்பு, கடந்த பிப்ரவரியில் 'அட்வான்டேஜ் அசாம் 2.0' நிகழ்ச்சியில் பிரதமரால் வெளியிடப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள, இந்த விமான முனையம், பிப்ரவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் வெறுமென விமான முனையம் சம்பந்தப்பட்டது கிடையாது. இது இந்தியாவின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு எந்த வேகத்தில் உருவாகி வருகிறது என்பதைக் காட்டுகிறது. ஜெர்மனியின் மியூனிக் நகரிலிருந்து வந்த நிபுணர் குழுவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம், முதல் நாளிலிருந்தே பாதுகாப்பான மற்றும் குறைபாடற்ற செயல்பாட்டை உறுதி செய்துள்ளது.
பொதுவாக விமான நிலையங்கள் கண்ணாடி மற்றும் கான்கிரீட் கட்டுமானங்களால் கட்டப்படும். ஆனால் இந்த விமான நிலையம் கட்ட சுமார் 140 டன் மூங்கில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது விமான நிலையங்கள் இனி உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
கவுகாத்தி சர்வதேச விமான நிலைய நிறுவனம் இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் செயல்பாடுகளை அதானி விமான நிலைய ஹோல்டிங்ஸ் லிமிடெட் வழிநடத்துகிறது. டிஜியாத்ரா வழிமுறை கொண்ட சலுகைகள், ஸ்மார்ட் செக்-இன் அமைப்புகள் மற்றும் விசாலமான பயணிகள் பகுதிகளைக் கொண்ட இந்த முனையம், 2032-க்குள் ஆண்டுக்கு 13.1 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டில், கவுகாத்தி விமான நிலையம் 6.50 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளது, இது வடகிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்துத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தற்போது, கவுகாத்தி இந்தியாவின் 10வது பரபரப்பான விமான நிலையமாக உள்ளது, இது வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களுக்கும் ஒரு முக்கிய மையமாகச் செயல்படுகிறது.
இந்தத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இது அசாம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியின் கொண்டாட்டம் திட்டத்தின் ஒரு அங்கம். ஆக்ட் ஈஸ்ட் கொள்கையின் கீழ் அசாம் இந்தியாவின் கிழக்குப் பகுதியின் நுழைவாயிலாக வளர்ந்து வருகிறது. மூங்கில் நிறைந்த இந்த முனையம் வலிமை, நிலைத்தன்மை மற்றும் "விக்சித் பாரத்" திட்டத்தில் மாநிலத்தின் வளர்ந்து வரும் பங்கை அடையாளப்படுத்துகிறது" என அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு குறித்து அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி பேசுகையில், "கவுகாத்தி முனையம் உலகத் தரத்திலான விமான நிலைய உள்கட்டமைப்பை விரைவாகவும், அதே சமயம் உள்ளூர் அடையாளத்துடன் ஆழமாக வேரூன்றியும் எவ்வாறு வழங்க முடியும் என்பதைக் காட்டுகிறது. இது இணைப்பை வலுப்படுத்தி, வடகிழக்கு முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து, பயணிகளுக்கு தடையற்ற, நவீன பயண அனுபவத்தை வழங்கும்" என்று கூறினார்.
மொத்த விமான நிலைய மேம்பாட்டிற்கு ₹5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது, இதில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறு ஆய்வு வசதிகளுக்காக ₹1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச சரக்கு உள்கட்டமைப்பு, இப் பிராந்தியம் முழுவதும் வர்த்தகம், தளவாடங்கள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications