மோடியை 'நண்பன்' என அழைத்த டிரம்ப்! பிரதமர் கொடுத்த ரிப்ளை.. இந்தியா-அமெரிக்கா பிரச்சனை ஓவர்?
டெல்லி: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வரி பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், திடீரென பிரதமர் மோடியை நண்பன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். இது குறித்து பிரதமர் மோடி அளித்துள்ள பதில் கவனம் பெற்றிருக்கிறது.
இந்திய பொருட்களுக்கான வரியை டிரம்ப் சமீபத்தில் 50% ஆக உயர்த்தினார். இதற்கான காரணம் எல்லாம் சப்பைக்கட்டுதான். சீனா, ரஷ்யாவுடன் சேர்ந்து அமெரிக்க பொருளாதாரத்துக்கு குழி பறித்துவிட கூடாது என்று பயந்துதான் இந்த வரியை டிரம்ப் போட்டிருக்கிறார். என்னதான் அமெரிக்காவும், இந்தியாவும் நண்பர்களாக இருந்தாலும் வரி விஷயத்தில் நம்மால் விட்டு கொடுக்க முடியாது அல்லவா? எனவே நாமும் அமெரிக்காவுக்கு எதிரான நகர்வுகளை தீவிரப்படுத்தினோம்.

குறிப்பாக சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் மோடி நேரடியாக சென்று பங்கேற்றிருந்தார். அங்கு புதின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து மோடி பேசியிருந்தார். சீனாவுக்கும் இந்தியாவுக்குமான உறவு புதிய உச்சத்தை எட்டியிருந்தது. இப்படியே போனால், நம்மை காலி செய்துவிடுவார்கள் என்று பயம் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு பரவ தொடங்கியது.
இந்த நிலையில்தான், மோடி எனது நண்பர் என டிரம்ப் தடாலடியாக பல்டி அடித்திருக்கிறார். நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்பிடம், "இந்தியாவுடன் உறவை புதுப்பிப்பீர்களா?" என கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்ப,
"நான் எப்போதும் அதனை செய்வேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. இது பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் இங்கு வந்து சென்றார்" என்று பதிலளித்துள்ளார்.
இதற்கு தற்போது மோடி ரிப்ளை கொடுத்திருக்கிறார். அதில், "நான் எப்போதும் அதனை செய்வேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு உள்ளது. இது பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. எப்போதாவது தான் இதுபோன்ற தருணங்கள் வருகின்றன. நான் எப்போதும் மோடியுடன் நன்றாக பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு கூட அவர் இங்கு வந்து சென்றார்" என்று பதிலளித்திருக்கிறார்.
இதற்கு மோடி கொடுத்துள்ள ரிப்ளை கவனம் பெற்றிருக்கிறது, "ட்ரம்பின் உணர்வுகளையும், நமது உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் நான் ஆழமாகப் பாராட்டுகிறேன். இந்தியா மற்றும் அமெரிக்கா மிக நேர்மறையான மற்றும் முன்னோக்குச் சிந்தனை கொண்ட, விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன" என்று கூறியிருக்கிறார்.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications