டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க இருக்கோம்.. நம்பிக்கை அளித்த புதின்.. நன்றி தெரிவித்த மோடி.. இரவில் நடைபெற்ற முக்கிய உரையாடல்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவலின் 2ஆம் அலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுடன் நேற்று உரையாடினார்.

Recommended Video

    நம்பிக்கை அளித்த Putin.. நன்றி சொன்ன Modi .. நேற்று நடைபெற்ற முக்கிய உரையாடல்

    இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 3.79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 3,645 பேர் உயிரிழந்தனர்.

    பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில்.. 18+ வயதுடையவர்களுக்கு மே 1-ல் தடுப்பூசி கிடையாதாம்.. காரணம் இதுதான்! பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில்.. 18+ வயதுடையவர்களுக்கு மே 1-ல் தடுப்பூசி கிடையாதாம்.. காரணம் இதுதான்!

    பிரதமர் மோடி - புதின் உரையாடல்

    பிரதமர் மோடி - புதின் உரையாடல்

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு தொலைப்பேசி வாயிலாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுடன் உரையாடினார். இதில் கொரோனா 2ஆம் அலை காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை, ஸ்புட்னிக் வி தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்தியாவுக்கு உதவ தயார்

    இந்தியாவுக்கு உதவ தயார்

    இது குறித்து பிரதமர் மோடி வரிசையாகப் பல ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டரில், நண்பர் புதினுடன் சிறப்பான முறையில் உரையாடல் அமைந்தது. கொரோனா நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ரஷ்யாவின் உதவி மற்றும் ஆதரவுக்கு அதிபர் புதினிடம் நன்றி தெரிவித்தேன். மேலும், இரு நாடுகளின் கூட்டணியை வலுப்படுத்த வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களிடையே 2 + 2 பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.

    முக்கிய ஆலோசனை

    முக்கிய ஆலோசனை

    விண்வெளி ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, ஹைட்ரஜன் பொருளாதாரம் ஆகியவை குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். ஸ்புட்னிக் வி தடுப்பூசியில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மனிதக்குலத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார். ரஷ்யா மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன் , கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகளும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர்.

    ஸ்புட்னிக் வி தடுப்பூசி

    ஸ்புட்னிக் வி தடுப்பூசி

    ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இறக்குமதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.. மேலும், ஸ்புடனிக் வி உற்பத்தி தொடர்பாக டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியில் பாதி இந்தியாவுக்கு வழங்கப்படும். இதன் மூலம் தடுப்பூசி பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    PM Modi and Russian President Vladimir Putin talks
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X