இன்று இந்தோனேசியா செல்கிறார் மோடி.. ஜி 20 மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் சர்வதேச கவுரவம்
டெல்லி: 17 வது ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு செல்கிறார். இந்த மாநாட்டின் முடிவில் ஜி 20 தலைமை பதவியை ஏற்கிறது இந்தியா.
17 வது ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று (நவம்பர் 14) தொடங்கி நவம்பர் 16 ஆம் தேதி வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற இருக்கிறது.
ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற மையக் கருத்தின் அடிப்படையில் இந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளில் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.

ஜி 20 மாநாடு
சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் என 3 தலைப்புகளின் கீழ் இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகள் நடைபெற்று தலைவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜி 20 நாடுகள் குழுவில் இடம்பெற்று உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு புறப்படுகிறார்.

இந்தோனேசியா பயணம்
இந்தோனேசிய அதிபர் ஜோகா விடடோவின் அழைப்பை ஏற்று இன்று டெல்லியில் இருந்து அந்நாட்டின் தலைநகர் பாலி நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்படுகிறார். ஜி 20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதுடன் அங்கு வரும் சில நாடுகளின் அதிபர்கள், பிரதமர்களை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேசுகிறார்.

இந்தியாவுக்கு கவுரவம்
இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு மிகப்பெரும் கவுரவம் கிடைக்க இருக்கிறது. அதுதான் ஜி 20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி. ஜி 20 நாடுகளின் மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய அதிபர், பிரதமர் நரேந்திர மோடியிடம் மரபுப்படி ஜி 20 நாடுகளின் தலைவர் பொறுப்பை வழங்குகிறார்.

இந்தியாவில் ஜி 20
இதனை அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறும். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட படத்தில் ஜி20 லோகோவில் தாமரை சேர்க்கப்பட்டு உள்ளது. இந்தோனேசிய தலைநகர் பாலியில் வசிக்கும் இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications