ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பதில்!
டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிகும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு ராஜ்யசபாவில் சற்று நேரத்தில் பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றி வருகிறார். லோக்சபாவில் இந்த விவாதங்களுக்கு நேற்று பதிலளித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது பிரதமர் மோடியை பேசவே விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பி இருந்தனர்.
18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24-ந் தேதி தொடங்கி ஜூலை 2-ந் தேதி வரை நடைபெற்றது. புதிய எம்பிக்கள் பதவி பிரமாணம், சபாநாயகர் தேர்தலைத் தொடர்ந்து ஜூன் 27-ல் லோக்சபா- ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. லோக்சபாவில் இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து லோக்சபா மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். பிரதமர் மோடி நேற்று பதிலுரையாற்றும் போது இடைவெளியே இல்லாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது அரசுத் தரப்பில் 50 முறை குறுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றி வருகிறார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications