பத்திரிகையாளர் டூ சீன உளவாளி- ஜாமீனில் வந்த ராஜீவ் சர்மா அன்னிய செலாவணி மோசடி வழக்கில் மீண்டும் கைது
டெல்லி: நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ரகசியங்களை சீனாவுக்கு விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா, அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் 40 ஆண்டுகாலமாக பத்திரிகையாளராக பணிபுரிந்தவர் ராஜீவ் சர்மா. முன்னணி செய்தி ஊடகங்களில் பணியாற்றிய ராஜீவ் சர்மா, ப்ரீலேன்சராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு சீனாவுக்கு உளவு பார்த்ததாக டெல்லி போலீசார் ராஜீவ் சர்மாவை கைது செய்தது. ராஜீவ் சர்மாவுடன் நெருக்கமாக இருந்த சீன பெண், நேபாள இளைஞர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

நாட்டின் ராணுவ நிலைகள், ராணுவ ரகசியங்கள் ஆகியவற்றை சீன உளவுப் பிரிவினருக்கு ராஜீவ் சர்மா கொடுத்து வந்ததும் ஆதாரங்களுடன் அம்பலமானது. இது பத்திரிகையாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராஜீவ் சர்மாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாமீன் கிடைத்தது.
இந்த நிலையில் இன்று ராஜீவ் சர்மா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவுக்கு உளவு பார்த்ததால் அவருக்கு ஹவாலா முறையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பினாமி வங்கி கணக்கு மூலம் ராஜீவ் சர்மா பெற்று வந்திருக்கிறார்.
ராஜீவ் சர்மா உள்ளிட்ட சீன உளவாளிகளுக்கு பணம் கொடுப்பதற்காகவே சில போலி சீன கம்பெனிகளும் நமது நாட்டில் தொடங்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராஜீவ் சர்மா, அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications