டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி - இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையினருக்கு எதிராக நாளை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. மருத்துவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்லியில் நீட் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கட்கிழமையன்று மௌலானா ஆசாத் மருத்துவக்கல்லூரியில் இருந்து உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் பேரணியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தி அனைவரையும் கலைந்து செல்லும்படி கூறியதாக தெரிகிறது.

காவல்துறையினர் கூறியதை கேட்காமல் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட மருத்துவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனையடுத்து இருசாராருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் காவல்துறையினர் 7 பேர் காயம் அடைந்ததாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொது சொத்துகளை சூறையாடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினரைக் கண்டித்து 4000 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேர ஊரடங்கு அமலானதால் பின்னர் கலைந்து சென்றனர். இன்றும் போராட்டம் தொடரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது போலீசார் அத்துமீறி தடியடி நடத்தியுள்ளனர் என அனைத்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, நாளைய தினம் காலை 8 மணி முதல் அனைத்து சுகாதார நல சேவைகளில் இருந்து விடுபட்டு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தடியடி நடத்தவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர். மருத்துவர்கள்தான் வன்முறையில் இறங்கியதாகவும் காவல்துறையினரின் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் டெல்லி மாநில காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மருத்துவர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் கொரோனாவிற்கு சிகிச்சை பெற வருவோரின் நிலையும் அவசர சிகிச்சைக்கு வருவோரின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
-
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications