2 முறை வீட்டிற்கு சென்று வந்தேன்.. போலீசாரிடம் ஷாக் தகவலை வெளியிட்ட அப்தாப்பின் புதிய கேர்ள் பிரண்ட்
டெல்லி: டெல்லியை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் தொடர்புடைய அப்தாப், கொலைக்கு பிறகு டேட்டிங் செயலிகள் மூலமாக 15 முதல் 20 பெண்களிடம் தொடர்பில் இருந்ததாக டெல்லி போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மநிலத்தை சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணுடன் டெல்லியில் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தவர் அப்தாப் அமீன் (வயது 28) என்ற இளைஞர்.
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் கொடூரமாக கொலை செய்தார். பின்னர் அந்த கொலையை மறைக்க அவர் செய்த காரியங்கள் அனைத்தும் கிரைம் திரில்லர் படங்களையே மிஞ்சும் அளவிற்கு அமைந்தது.
ரஷீத் கானாக மாறிய விகாஷ் குமார்.. ஷ்ரத்தா கொலையை ஆதரித்து வீடியோ! அம்பலப்படுத்திய உபி போலீஸ்

ஒன்றுமே தெரியாதது போல
டெல்லி மட்டும் அல்லாது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு கொலை வழக்காக மாறிய ஷர்த்தா வழக்கில் போலீசார் விசாரணையில் தினம் தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி வைத்தது. கடந்த மே மாதமே ஷ்ரத்தாவை கொலை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல அப்தாப் அமீன் சர்வ சாதாரணமாக நடமாடி வந்து இருக்கிறார். ஷ்ரத்தாவின் தந்தை மகளை பற்றி எந்த தகவலும் இல்லாததால், போலீசிடம் நடத்திய விசாரணைக்கு பிறகே இந்த கொடூர கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

3 வாரங்கள் வீட்டிலேயே
அதுவும் ஷ்ரத்தாவை கொலை செய்த அப்தாப், 3 வாரங்கள் உடலை வீட்டிலேயெ வைத்து இருந்து இருக்கிறார். இதற்காக புதிதாக பிரிட்ஜ் ஒன்றையும் வாங்கி வைத்த அப்தாப், எந்த அச்சமும் இன்றி வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் டேட்டிங் ஆப் மூலமாக பெண்களை வீட்டிற்கு வரவழைத்து ஜாலியாக இருந்து இருக்கிறார். அதன்பிறகே, ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் அப்தாப் வீசி விட்டு வந்து இருக்கிறார்.

உண்மை கண்டறியும் சோதனை
கொலை செய்து விட்டு அதை மறைப்பதற்காக சைக்கோ கொலையாளி போல அப்தாப் செய்த வேலைகள் அனைத்தும் கேட்போரை நடுநடுங்க வைக்கும் வகையில் அமைந்தது. ஷ்ரத்தாவை கொலை செய்துவிட்டு யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவரது சமூக வலைத்தளங்களையும் அப்தாப் பயன்படுத்தி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

அப்தாப்பின் புதிய தோழியிடம் விசாரணை
இந்த வழக்கில் அப்தாப் அமீனுக்கு எதிராக பல்வேறு முக்கிய தடயங்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, ஷ்ரத்தா உடலை வீட்டில் வைத்துக்கொண்டே அப்தாப் வேறு பெண்களுடன் டேட்டிங்கில் ஈடுபட்டது குறித்த தகவல்கள் வெளியாகின. அப்தாப்புடன் தொடர்பில் இருந்த பெண்களை கண்டுபிடித்து அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அப்தாப்பின் புதிய தோழி ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அந்த பெண் வெளியிட்டு இருக்கிறர்.

ரிங்கை பரிசாக வழங்கினார்
அவர் கூறுகையில், இந்த கொலை சம்பவம் நடந்த தேதிக்குப் பிறகு இரண்டு முறை அப்தாப் தங்கியிருந்த பிளாட்டிற்கு சென்று வந்தேன். ஆனால், அங்கு ஷ்ரத்தாவின் உடல் இருந்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு ஆடம்பரமான ரிங்குகளை அப்தாப் பரிசாக அளித்தார்" என்றார். கொலை நடந்த பிறகு அப்தாப் பிளாட்டிற்கு அந்த பெண் சென்றது தெரியவந்து இருக்கிறது.

15 முதல் 20 பெண்களிடம்..
இதேபோல் அப்தாப் அளித்த ரிங்க் கூட ஷ்ரத்தாவிற்கு சொந்தமானது என்று தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து, அப்தாப் பரிசாக அளித்த ரிங்கை கைப்பற்றிய போலீசார் அந்தப்பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து இருக்கின்றனர். இந்தப்பெண் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு டேட்டிங் ஆப்கள் மூலமாக 15 முதல் 20 பெண்களிடம் அப்தாப் தொடர்பில் இருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.