டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 மாநில தேர்தல் முடிவுகள்.. பழியை எங்கே போட்டாரு பாருங்க ராஜ்நாத்சிங்

Google Oneindia Tamil News

டெல்லி: 5 மாநில தேர்தல்களில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீதான மதிப்பீடுதான் இந்த தேர்தல் முடிவுகள். மோடி அரசு மீதான மதிப்பீடு இது கிடையாது. தெலுங்கானாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி அங்கு மெஜாரிட்டி வெற்றியை சுவைக்க உள்ளது.

Polls were fought on state governments performance: Rajnath Singh

வெற்றி பெற்ற கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார். மற்ற முக்கிய பாஜக தலைவர்கள், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை, இது வெற்றிகரமான தோல்விதான் என்று வர்ணித்தார். மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றால் மோடி தலைமையை புகழ்ந்த பாஜக தலைவர்கள், இப்போது மாநில அரசுகள் மீது பழிபோடுவது குறிப்பிடத்தக்கது.

English summary
With election trends showing reverses for the BJP, senior party leader and Home Minister Rajnath Singh Tuesday said the polls were fought on the basis of the performance of state governments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X