மன்னிப்பு கேட்காதீங்க.. நீங்கள் கொண்டாடப்பட வேண்டியவர்.. வருத்தப்பட்ட பூஜாவை.. தேற்றிய பிரதமர் மோடி
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் வெற்றி, கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த போட்டியில் தான் தங்கம் வெல்ல நினைத்ததாகவும், ஆனால் வெண்கலம் மட்டுமே வென்றுள்ளதால் தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் பூஜா கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி "உங்களது வெற்றியை கொண்டாட வேண்டிய தருணம் இது. மன்னிப்பு கேட்கும் தருணம் அல்ல" என்று ஆறுதல் கூறியுள்ளார்.
22வது காமன்வெல்த் போட்டியானது இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற மகளிருக்கான 76 கி எடை பிரிவு ஃப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் களம் இறங்கிய வீராங்கனை பூஜா ஆஸ்திரேலியாவின் நவோமி டி புரூனை வீழ்த்தி வெண்கல பத்தக்கத்தை வென்றார்.
இதன் மூலம் இந்தியாவின் மல்யுத்த பிரிவில் 6 வீராங்கனைகள் பதக்கங்களை வென்றுள்ளனர். அன்ஷு மாலிக் ,சாக்ஷி வெள்ளி பதக்கமும், வினேஷ் போகட் தங்க பதக்கமும், பூஜா கெலாட் மற்றும் திவ்யா கக்ரான் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தனர். இந்த வெற்றிக்கு பின்னர் பேட்டியளித்த பூஜா, "நான் வெண்கலம் வென்றதற்காக எனது நாட்டினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தங்கம் வென்று தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பி இருந்தேன்." என கண்ணீர் மல்க கூறினார். மேலும், "எனது தவறுகளிலிருந்து பாடம் கற்று அதை சரி செய்வேன்" என்று கூறினார்.
இந்நிலையில் "பூஜா, உங்களுடைய வெற்றி கொண்டாடப்பட வேண்டியது. வருத்தப்பட வேண்டியது அல்ல" என பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "பூஜா, உங்கள் பதக்கம் கொண்டாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. உங்கள் வாழ்க்கைப் பயணம் எங்களை ஊக்குவிக்கிறது. இந்த வெற்றி எங்களை மகிழ்விக்கிறது. நீங்கள் எதிர்காலத்தில் பெரிய விஷயங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்." என கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், மகளிர் அணியினர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் மகளிர் அணியினர் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அந்நாட்டு அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருப்பது பெரிய விஷயமாகும். இதனையடுத்து இந்திய மகளிர் அணிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications