கிரெடிட் எடுத்து கொண்டது மோடி.. பழி மட்டும் ஹர்ஷவர்தன் மீதா?.. அநியாயம்.. பிரசாந்த் பூஷண் ட்வீட்!
டெல்லி: கொரோனாவை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தியதாக பெருமைப்பட்டு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை நீக்கியிருப்பது அநியாயம் என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யவுள்ள பிரதமர் மோடி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை நீக்கியுள்ளார். இதனால் அவர் ராஜினாமா செய்துள்ளார். இதற்கு காரணமாக கொரோனா 2ஆவது அலை உச்சத்தில் இருந்த போது ஹர்ஷவர்தன் சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
இதை மனதில் வைத்தே அவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த செயலை விமர்சித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் நீட்டிப்பு
அவர் அனுப்பிய ட்வீட்டில் முதலில் லாக்டவுன் நீட்டிப்பு, லாக்டவுன் தளர்வு, தடுப்பூசிகள் உள்ளிட்ட விவகாரங்களில் முடிவு எடுத்தது பிரதமர் நரேந்திர மோடி. அது போல் கொரோனாவை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தியதற்கான நற்பெயரையும் அவரே எடுத்துக் கொண்டார்.

தடுப்பூசி போட்டது
தடுப்பூசி போட்டதில் சாதனை படைத்தமைக்காக மோடி அனைவருக்கும் நன்றியும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது டாக்டர் ஹர்ஷவர்தனை நீக்கியது எந்த வகையில் நியாயம்? இது மிகவும் அநியாயம் என பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம்
கொரோனாவின் இரண்டாவது அலையால் கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் தினசரி எண்ணிக்கை 2 லட்சத்திற்கு மேல் இருந்தது. இதன் பின்னர் 3 லட்சமாகவும் ஆனது. ஆக்ஸிஜன் படுக்கை, படுக்கை வசதிகள் இல்லாமல் நிறைய நோயாளிகள் மரணிக்க நேர்ந்தது.

இந்தியாவில் தடுப்பூசி
அது போல் இந்தியாவில் தடுப்பூசி அதிகளவில் போடப்பட்டாலும் தற்போது போதிய இருப்பு இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் மன் கீ பாத் எனும் ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம் என பெருமிதம் பொங்க சொல்லி வந்த நிலையில் தற்போது ஹர்ஷவர்தனை நீக்கம் செய்ததன் மூலம் பாஜக அரசு கொரோனாவை சரியாக கையாளவில்லை என்பது ஒப்புக் கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது.












Click it and Unblock the Notifications