டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி அலையா? சுனாமியா?... பிரதமர் வேட்பாளர்களிலும் முதலிடம்

Google Oneindia Tamil News

டெல்லி: மோடியின் அலை மீண்டும் வீசுகிறது என்று சொல்லும் அளவிற்கு, தொடர்ந்து பாஜகவுக்கு சாதமாக அமைந்து வருகிறது. பிரதம வேட்பாளர்களிலும் மோடி முதலிடம் பெற்றுள்ளார்.

நரேந்திரமோடியின் ஆதரவு அலையால், 2014-ம் ஆண்டு முழு பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றது. தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில்,
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்படுகிறது. கணிப்புகள் எல்லாம் சரியாக இருந்தால் மோடி அலை குறையவில்லை. இப்போது வேகமாக வீசுகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்

Pre Poll survey: Modi has also topped the Prime Ministerial Candidate

இந்தநிலையில், CSDS-Lokniti நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், பிரதமர் நரேந்திர மோடிக்கு 44% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு 24 % மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

இந்தி பேசுபவர்களும், படித்த இளைஞர்கள் பலரும் மோடிக்கு அதிகளவு ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம், பிரதமர் வேட்பாளர்களில் மோடியுடன் ஒப்பிடுகையில், ராகுல் காந்தி பாப்புலாரிட்டியிலும் மிகப் பின்தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

2014 தேர்தலில் பாஜக மொத்தமாக 269 இடங்களை மட்டுமேக் கைப்பற்றியது. நரேந்திர மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் அதிருப்தி தான் அதிகளவு வீசுகிறது ஆதரவு அலை வீசவில்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 300 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருப்பது எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

English summary
CSDS-Lokniti pre Poll survey: Modi has also topped the prime candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X