இன்றே கடைசி.. ஜனாதிபதியாக விடைபெறும் ராம்நாத் கோவிந்த்.. மாலையில் நாட்டு மக்களுக்கு உரை!
டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவுக்கு வருகிறது. இதையடுத்து இன்று மாலையில் நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுகிறார். இதைதொடர்ந்து நாட்டின் 15வது ஜனாதிபதியாக நாளை திரெளபதி முர்மு பதவியேற்க உள்ளார்.
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக இருப்பவர் ராம்நாத் கோவிந்த். இவர் கடந்த 2017 ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டார்.
2017 ல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் 5 ஆண்டு கால பதவியை முற்றிலுமாக நிறைவு செய்துள்ளார்.

பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி
உத்தர பிரதேச மாநிலம் பாரனுக் கிராமத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த். சட்டம் படித்திருந்தார். வழக்கறிஞராக தனது வாழ்க்கையை துவங்கிய இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1994, 2000 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து மேல்சபை உறுப்பினராக செயல்பட்டார். தலித் வகுப்பை சேர்ந்த இவர் 2017ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 2017 ஜூலை 25ல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

5 ஆண்டு ஜனாதிபதியாக செயல்பாடு
இவர் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் மத்திய அரசின் பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். குறிப்பாக சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்கும் வகையிலான ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களை உருவாக்கும் மசோதா உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் வழங்கினார். அதோடு மூன்று வேளாண் சட்ட மசோதா ரத்துக்கும் ஒப்புதல் வழங்கினார்.இவர் தனது பதவிக்காலத்தில் 33 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார். செய்து நாட்டின் முதல் குடிமகனாக இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்து உலக அரங்கில் இந்தியாவின் உறவை வலிமைப்படுத்தினார்.

உரையுடன் விடைபெறும் ராம்நாத் கோவிந்த்
இந்நிலையில் தான் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தின் 5 ஆண்டு பதவிக்காலம் இன்று நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ராம்நாத் கோவிந்துக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதன்பிறகு நேற்று ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதையடுத்து இன்று அவர் ஜனாதிபதியாக விடைபெறுகிறார். இதையொட்டி இன்று மாலை 7 மணிக்கு அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

திரெளபதி முர்மு நாளை பதவியேற்பு
ராம்நாத் கோவிந்தை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரெளபதி முர்வு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் 15 வது ஜனாதிபதியாக அவர் நாளை பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications