டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணி.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. முக்கிய தகவல்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: 41 நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் பணியை இன்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மின் துறையில் சுய சார்பு இந்தியா திட்டத்தை நிறைவேற்ற இது முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்தார்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் ( ஆத்மநிர்பார் பாரத்,) கீழ் 41 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக துவக்கி வைத்தார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னம்பிக்கை கொள்ள, இன்று ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாய்க்கு தைராய்டு.. சாப்பாட்டுக்கு கஷ்டம்.. கொரோனா பாதித்த உடல்களை கையாளும் பணியில் பிளஸ் 2 மாணவன்! தாய்க்கு தைராய்டு.. சாப்பாட்டுக்கு கஷ்டம்.. கொரோனா பாதித்த உடல்களை கையாளும் பணியில் பிளஸ் 2 மாணவன்!

நாம் மாறுவோம்

நாம் மாறுவோம்

இப்போது நாம் இறக்குமதி செய்யும் மின் தயாரிப்புகளில், எதிர்காலத்தில் முக்கிய ஏற்றுமதியாளர்களாக இருப்போம். உலகின் நான்காவது பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக இந்தியா இருப்பதால், நாம் ஏன், இந்த துறையில் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாற முடியாது.

20 ஆயிரம் கோடி முதலீடு

20 ஆயிரம் கோடி முதலீடு

2030 க்குள் சுமார் 100 மில்லியன் டன் நிலக்கரியை எரிவாயுவாக்க இலக்கு வைத்துள்ளோம். இதற்காக 4 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வருவாய் கிடைக்கும்

கூடுதல் வருவாய் கிடைக்கும்

2014 க்குப் பிறகு, நிலக்கரித்துறையில் நிலைமையை மாற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நிலக்கரித் துறை வலுப்பெற்றது: வணிக நிலக்கரி சுரங்கத்தில் தனியார் துறையை அனுமதிப்பது உலகின் நான்காவது பெரிய நிலக்கரி இருப்புக்களைக் கொண்ட நாட்டின் வளங்களைத் திறப்பதாகும். நிலக்கரி ஏல செயல்முறை மூலம் மாநிலங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இந்தியா வளர்ச்சி பெறும்

இந்தியா வளர்ச்சி பெறும்

நிலக்கரித் துறை தொடர்பான இந்த சீர்திருத்தங்கள் நமது பழங்குடியினரையும் கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவையும் வளர்ச்சியின் தூண்களாக மாற்றுவதற்கான மிகப் பெரிய வழியாகும். இந்தியா கொரோனாவை எதிர்த்துப் போராடி அதற்கு எதிரான போரில் வெற்றி பெறும்; தொற்றுநோயை வென்று இந்தியாவை தன்னம்பிக்கை கொள்ளும்" இவ்வாறு கூறினார்.

English summary
To make India self-reliant in the energy sector, a major step is being taken today: PM Narendra Modi at the launch of auction of 41 coal mines for commercial mining
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X