தேசிய கல்வி கொள்கை பற்றி விவாதம்! பிரதமர் மோடி தலைமையில் தலைமை செயலாளர்கள் மாநாடு துவக்கம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் தேசிய மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை குறித்து செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களின் முதல் தேசிய மாநாடு இதுவாகும்.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று, நாளை என 2 நாட்கள் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இதில் மாநிலம், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் உள்பட 200க்கும் அதிகமானவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மத்திய-மாநில அரசுகள் இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதை இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது.
மேலும் மாநிலங்களுடன் இணைந்து நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டுவது குறித்தும், தேசிய கல்வி கொள்கை, உள்கட்டமைப்பு திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இதுதவிர தேசிய கல்வி கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் பல்வகை பயிர்களை பயிரிடும் திட்டம் போன்றவற்றை அமல்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாத தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது மாநிலங்களுடன் இணைந்து விரைவான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவது, கல்வி, வேலைவாய்ப்பு, எளிதான வாழ்க்கை ஆகியவற்றை ஏற்படுத்துவது, வேளாண்மையில் தற்சார்பு நிலையை அடைவது போன்றவற்றில் குழுவாக இணைந்து செயல்படுவது குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் இந்த மாநாடு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications