டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலையிலேயே எய்ம்ஸ் வந்த பிரதமர் மோடி.. ஆர்வமுடன் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்!

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி மீண்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

Recommended Video

    டெல்லி: 2-வது டோஸ் கொரோனா தடுப்பு ஊசி... செலுத்தி கொண்ட பிரதமர்!

    பிரதமர் நரேந்திர மோடி பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸை மார்ச் 1ம் தேதி எடுத்திருந்தார். இந்நிலையில் இன்று கோவேக்சின் தடுப்பூசியின் 2வது டோஸை எடுத்துக்கொண்டார்.

    Prime Minister Narendra Modi takes his second dose of COVID19 vaccine at AIIMS

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடிக்கு புதுச்சேரியைச் சேர்ந்த நர்ஸ் நிவேதா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸ் நிசா சர்மா ஆகியோர் தடுப்பூசி போட்டுவிட்டனர்.

    பொதுவாகவே கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. இதில கோவேக்சினை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்தது. கோவிஷீல்டு தடுப்பூசி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்தது. ஆனால் அதை இந்தியாவில் உற்பத்தி செய்வது இந்திய நிறுவனமான சீரம் ஆகும்.

    நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசியை பலர் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல பிரபலங்கள் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸையும் செலுத்த தொடங்கி உள்ளனர். இரண்டு டோஸ்க்கு இடையில் குறிப்பிட்ட மாதம் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    English summary
    Prime Minister Narendra Modi takes his second dose of COVID19 vaccine at AIIMS in delhi. He received the first dose of Bharat Biotech's COVAXIN on March 1.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X