பஞ்சாப்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது- தொங்கு சட்டசபைதான்- ஜீ டிவி சர்வே
டெல்லி: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; பஞ்சாப் மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்று ஜீ டிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தொங்கு சட்டசபை- கணிப்புகள்
பஞ்சாப் தேர்தல் தொடர்பான இதுவரையிலான கருத்து கணிப்புகள் அம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும்; எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கூறி வருகின்றன. ஜீ டிவி நடத்திய இறுதி கட்ட கருத்து கணிப்பும் இதனை உறுதி செய்துள்ளது.

ஆம் ஆத்மிக்கு அதிக இடங்கள்
ஜீ டிவி கருத்து கணிப்பு விவரங்கள்: ஆம் ஆத்மி கட்சியே அதிக இடங்களைப் பெறும் கட்சியாக உருவெடுக்கும்; ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்ததாக காங்கிரஸுக்கு 2-வது இடம் கிடைக்கும். ஆம் ஆத்மி கட்சிக்கு 39 முதல் 42 இடங்கள்; காங்கிரஸ் கட்சிக்கு 38 முதல் 41 இடங்கள் கிடைக்குமாம். சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு 25 முதல் 28 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாம். பாஜகவுக்கு 3 முதல் 6 இடங்களும் இதர கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்களும் கிடைக்கும் என்கிறது ஜீ டிவி சர்வே.

சித்துவுக்கு ஆதரவே இல்லை
முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மியின் பக்வந்த் மானுக்கு 38% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய முதல்வர் சரண்ஜித்சிங்குக்கு 34% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிரோமணி அகாலிதளத்தின் சுக்பீர் சிங் பாதலுக்கு 20%; முதல்வர் வேட்பாளர் நானே என அடம்பிடிக்கும் காங்கிரஸின் நவ்ஜோத்சிங்குக்கு 5% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மாஜி முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு வெறும் 3% பேர் மட்டுமே முதல்வர் பதவிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

கட்சிகளின் வாக்கு சதவீதம்
கட்சிகளின் வாக்கு சதவீதம்: ஆம் ஆத்மி- 34%; காங்கிரஸ் 30%; சிரோமணி அகாலிதளம் 25+%; பாஜக- 6%; இதர கட்சிகள் 5%. இந்த கருத்து கணிப்பு மொத்தம் 80,000 பேரிடம் எடுக்கப்பட்டதாகவும் ஜீ டிவி தெரிவித்துள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications