மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு.. உத்தரவிட்டதே அமித் ஷா தான்! ராகுல் காந்தி பேச்சால் கடும் அமளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் நேரடியாக பொறுப்பு என்றும் உள்துறை அமைச்சர் உத்தரவின் பெயரிலேயே மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். இதனால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

நீட் விவகாரம் இப்போது நாடு முழுக்க பெரிய விஷயமாக வெடித்துள்ளது. இதற்கிடையே நீட் உள்ளிட்ட போட்டி தேர்வு வினாத்தாள்களை லீக் செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடந்து வரும் நிலையில், நேற்று பிரியங்கா காந்தி இது தொடர்பாக பேசினார்.

Rahul Gandhi on NEET protest Rahul Gandhi Amit Shah neet

ராகுல் காந்தி

இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசினார். அப்போது மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் காரணம் என நேரடியாகவே குற்றஞ்சாட்டினார். மேலும், உள் துறை அமைச்சர் உத்தரவில்தான் மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் சாடினார்.

மாணவர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட போலீசார் நடவடிக்கையை சுட்டிக்காட்டி பேசிய ராகுல் காந்தி, "மாணவர்களை நோக்கி சுட உத்தரவிட்டது உள்துறை அமைச்சர் தான். மாணவர்களின் உடலில் பெல்லட் குண்டுகளை பாய்ச்சியது அமித் ஷாவின் உத்தரவு தான். இந்திய மாணவர்களை சுடுமாறு அவர் உத்தரவிட்டார். மாணவர்கள் மீது இத்தகையா நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் அதிகாரம் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சருக்கு மட்டுமே உள்ளது" என்றும் அவர் கூறினார்.

கடும் அமளி

ராகுல் இப்படி கூறியதால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. ராகுல் காந்தியின் பேச்சுக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள்? உள்துறை அமைச்சர் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார் என்று எப்படி கூறலாம்? இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு" என்று கண்டனம் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தனது தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. அப்படி இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு எதிர்க்கட்சி எம்பிக்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்போது தலையிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "ஆதாரங்கள் இல்லாமல் அவையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது" என்று ராகுல் காந்தியை எச்சரித்தார்.

ஆர்எஸ்எஸ்

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "நாட்டின் கல்வி அமைப்பை மொத்தமாக ஆர்எஸ்எஸ் கைப்பற்றியுள்ளது. தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சகத்தை கவனிக்கவில்லை. கல்வி அமைச்சகத்தை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்புதான். மாணவர்கள் ஆர்எஸ்எஸ் கற்பனை செய்து உருவாக்கிய வரலாற்றை படிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. தர்மேந்திர பிரதான் என்பவர் வெறுமன ஒரு அடையாளம் மட்டுமே. உண்மையான எதிரி ஆர்எஸ்எஸ் தான்!" என்றார்.

தனது உரையின் தொடக்கத்தில், சமீபத்தில் சந்தித்த 18 வயது மாணவி ஒருவருடனான உரையாடலை ராகுல் காந்தி பகிர்ந்துகொண்டார். அப்போது அந்த மாணவி குறிப்பிட்டதாக ஒரு வார்த்தையை ராகுல் காந்தி கூறினார். அது அவைக்குறிப்பில் இடம்பெறக்கூடாத வார்த்தை என்று பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீக்கப்பட்ட வார்த்தை

அப்போதும் அவையில் சலசலப்பு நிலவியது. தொடர்ந்து பேசிய ராகுல், "நான் அந்த வார்த்தையை அவையில் இருக்கும் இன்னொருவரை குறிப்பிட்டு தான் பயன்படுத்தக்கூடாது. நான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு மாணவி சொன்னதை மட்டுமே மேற்கோள் காட்டினேன். அவையில் இருக்கும் யாரையும் குறிப்பிடவில்லை" என்று ராகுல் காந்தி விளக்கம் அளித்தார். இருப்பினும், அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+