டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“EGO னாமிக்ஸ்” - மன்மோகன் VS மோடி அரசு.. இந்திய பொருளாதாரம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட ஒப்பீடு

Google Oneindia Tamil News

டெல்லி: 2014 ஆம் ஆண்டிலும் 2022 ஆம் ஆண்டிலும் உள்ள இந்திய பொருளாதார ஒப்பீட்டை வெளியிட்டு உள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, "பொருளாதாரத்துக்கு அகங்காரம் முட்டுக்கட்டையாக இருந்தால்.." என்று குறிப்பிட்டு உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஜில்லென பெய்யும் மழை..கூல் அறிவிப்பு வெளியிட்ட வானிலை மையம் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஜில்லென பெய்யும் மழை..கூல் அறிவிப்பு வெளியிட்ட வானிலை மையம்

குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் தேசிய அளவில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள் குறித்தும் அவர் பதிவிட்டு வருகிறார்.

ராகுல் காந்தி வெளியிட்ட ஒப்பீடு

ராகுல் காந்தி வெளியிட்ட ஒப்பீடு

அத்துடன் அவர் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சூழல் குறித்தும் தற்போதைய பாஜக ஆட்சியில் நிலவும் நிலை குறித்தும் பல்வேறு ஒப்பீடுகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நிலவும் பொருளாதார சூழல் மற்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியிலிருந்தபோது நிலவிய பொருளாதார சூழலை ஒப்பிட்டு ராகுல் காந்தி பதிவிட்டு உள்ளார்.

இந்திய அரசின் கடன்

இந்திய அரசின் கடன்

"பொருளாதாரத்துக்கு அகங்காரம் முட்டுக்கட்டையாக இருந்தால்" என்று குறிப்பிட்டு ராகுல் காந்தி பகிர்ந்துள்ள அந்த பதிவில், கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அரசுக்கு இருந்த கடன் ரூ.56 லட்சம் கோடி என்றும், தற்போது 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசுக்கு இருக்கும் கடன் ரூ.139 லட்சம் கோடி என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தனிநபர் கடன்

தனிநபர் கடன்

கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது இந்தியாவில் ஒவ்வொரு தனி நபர் மீதான கடன் தொகை ரூ.44,348 கோடியாக இருந்தது என்றும், தற்போது 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் ரூ.1,01,048 ஆக அதிகரித்து உள்ளது எனவும் தனது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.

வேலையின்மை

வேலையின்மை

வேலைவாய்ப்பின்மையை பொறுத்தவரை கடந்த 2014 ஆம் ஆண்டு 4.7 சதவீதமாக இருந்தது என்றும், தற்போது 2022 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் ரூ.59 ஆக இருந்தது என்றும் தற்போது 2022-ல் அது ரூ.80 ஆக உயர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்

கேஸ் விலை

கேஸ் விலை

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 2014 ஆம் ஆண்டில் ரூ.410 ஆக இருந்தது என்றும், தற்போது 2022 ஆம் ஆண்டு அது ரூ.1,053 ஆக அதிகரித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் வணிக பற்றாக்குறையை பொறுத்தவரை கடந்த 2014 ஆம் ஆண்டு வணிக பற்றாக்குறை 135 பில்லியன் டாலராக இருந்தது எனவும் 2022ல் அது 190 பில்லியன் டாலராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

English summary
Rahul Gandhi released economic comparision between 2014 and 2022: 2014 ஆம் ஆண்டிலும் 2022 ஆம் ஆண்டிலும் உள்ள இந்திய பொருளாதார ஒப்பீட்டை வெளியிட்டு உள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, “பொருளாதாரத்துக்கு அகங்காரம் முட்டுக்கட்டையாக இருந்தால்..” என்று குறிப்பிட்டு உள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X