ஞானேஷ் குமார் இல்லாவிட்டால் மோடி பிரதமராகி இருக்க முடியாது.. ராகுல் காந்தி கடும் ‘அட்டாக்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அவர் சிறைக்கு செல்வார். ஞானேஷ் குமார் இல்லாவிட்டால் நரேந்திர மோடி பிரதமராகி இருக்க முடியாது. அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராகி இருக்க முடியாது'' என்று ராகுல் காந்தி கூறினார்.

rahul-gandhi-says-that-without-gyanesh-kumar-neither-narendra-modi-would-have-become-pm

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் இன்று 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் பேரணி நடத்தினர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில் இருந்து திறந்த வாகனத்தில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ராம்லீலா மைதானத்துக்கு திறந்த வாகனத்தில் வந்தனர். அதன்பிறகு ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர். இதில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

''நான் சொல்வதை கேளுங்கள். நான் சொல்வது எப்போதும் உண்மையாகிவிடுகிறது இல்லையா? இந்தியாவின் ஒவ்வொரு இளைஞரிடமும் நான் சொல்கிறேன். ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் நீக்கப்படுவார். ஞானேஷ் குமார் சிறைக்கு செல்வார்.

ஞானேஷ் குமார் இல்லாவிட்டால் நரேந்திர மோடி பிரதமராகி இருக்ககூடாது. அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராகி இருக்க முடியாது. உண்மையைச் சொல்லப்போனால் ஞானேஷ் குமாருக்கு இரவில் தூக்கமே வரவில்லை. அவர் பயந்துபோய் தூங்க முடியாமல் தவிப்பதை பார்க்கும்போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர் செய்திருப்பது மிகப்பெரிய குற்றம்.

இந்த நாட்டின் குரலையும் ஆன்மாவையும் ஒடுக்க அவர் முயன்றுள்ளார். இருப்பினும், நாங்கள் வெறுப்பையோ பகைமையையோ கொண்டவர்கள் அல்ல. நாங்கள் அன்பைப் போற்றுபவர்கள். இந்த நாட்டில் மீண்டும் அன்பையும் சகோதரத்துவத்தையும் கொண்டுவர விரும்புகிறோம். இந்தப் போராட்டம் ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ சொந்தமானது அல்ல. இது ஒரு கூட்டுப் போராட்டம். இது இந்தியாவின் போராட்டம், இந்தியாவின் குரல்.

நாங்கள் நரேந்திர மோடியையோ, அமித் ஷாவையோ அல்லது ஞானேஷ் குமாரையோ வெறுக்கவில்லை. நாங்கள் யாரையும் வெறுப்பவர்கள் இல்லை. அன்பை விதைப்பவர்கள். நாங்கள் அகிம்சையைப் பின்பற்றுபவர்கள். என்னை பொறுத்தவரை, எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. நரேந்திர மோடி, அமித் ஷா அல்லது ஞானேஷ் குமார் என யாரும் எனக்கு எதிரிகள் கிடையாது. ஆனால், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் குரலும் எனக்கு மிக முக்கியமானது. அது மதத்தை விடவும் மேலானது. அதுவே எனது மதம்.

ஆனால், அரசியலமைப்பைச் சிதைக்க உங்களை அனுமதிக்க மாட்டோம். என்ன நடந்தாலும், அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகள் கிடைக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொழிலாளிக்கு அவரது உரிமைகள்கிடைக்கவில்லை. மொத்த செல்வமும் இரண்டு அல்லது 3 நபர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இதுபோன்ற இந்தியாவை நாங்கள் விரும்பவில்லை. இதுபோன் இந்தியாவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

வரிசையில் கடைசியாக நிற்கும் நபர் உட்பட, ஒவ்வொரு தனிமனிதனின் குரலையும் நாம் பாதுகாக்க வேண்டும். அவர் இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, சீக்கியராகவோ, பழங்குடியினராகவோ, தலித்தாகவோ, பெண்ணாகவோ அல்லது மாற்றுத்திறனாளியாகவோ இருக்கலாம். நாம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். அன்பின் கடை திறக்கப்போகிறது. இந்த நாடு மீண்டும் சரியான பாதையில் பயணிக்கப்போகிறது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+