டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்க வேலையை பாருங்க...இந்தியாவுக்கு ஏன் மூக்கை நுழைக்கிறீங்க...கனடா பிரதமருக்கு,ராஜ்நாத்சிங் கண்டனம்

Google Oneindia Tamil News

புதுடெல்லி: நமது எல்லைகளில் சிக்கலை ஏற்படுத்தும் எவரையும் இந்தியா விடாது எனவும் இந்தியா - சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, அவை நேர்மறையான விளைவை ஏற்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு என ராஜ்நாத் சிங் கூறினார்.

விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க உலகின் எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா! நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா!

சிறப்பு பேட்டி

சிறப்பு பேட்டி

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏ.என்.ஏ.வுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


லடாக் எல்லையில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான மோதலைக் குறைப்பதற்காக, இரு தரப்பிலும் இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இராணுவ நிலையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் எப்போது வேண்டுமானாலும் நடைபெறும்.

அனுமதிக்க மாட்டோம்

அனுமதிக்க மாட்டோம்

நிலைமை என்பது ஒரு நேர்மறையான வளர்ச்சி என்று நான் நினைக்கவில்லை. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன, அவை நேர்மறையான விளைவை ஏற்படுத்த வேண்டும். அதுவே நம்முடைய எதிர்பார்ப்பு ஆகும். உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதியில் நமது ராணுவ வீரர்களை குறைக்க மாட்டோம். நமது எல்லைகளில் சிக்கலை ஏற்படுத்தும் எவரையும் இந்தியா விடாது. அவர்களை நாம் உறுதியாக அனுமதிக்க மாட்டோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

தவறாக வழிநடத்த முயற்சி

தவறாக வழிநடத்த முயற்சி

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் குறித்தும், அவர்களுக்கு கனடா பிரதமர் உள்ளிட்ட சிலர் ஆதரவு அளித்துள்ளது குறித்தும் ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:- நமது விவசாயி சகோதரர்களை சிலர் தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தியாவின் உள்விவகாரம்

இந்தியாவின் உள்விவகாரம்

அதே விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மூன்று வேளாண் சட்டங்களின் உட்பிரிவை விவசாயிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. எந்தவொரு நாட்டின் பிரதமருக்கும் நான் கூறிக்கொள்வதெல்லாம், இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கக் கூடாது.

நாங்களே தீர்த்து கொள்வோம்

நாங்களே தீர்த்து கொள்வோம்

இந்தியாவுக்கு வெளிப்புற தலையீடு எதுவும் தேவையில்லை. எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம். இது(விவசாயிகள் போராட்டம்) ஒரு இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. எனவே இந்தியாவின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க உலகின் எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

English summary
Defense Minister Rajnath Singh has said that India will not allow anyone to cause trouble on our borders and that there has been no progress in the India-China talks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X