பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடையா? தீவிரம் காட்டுகிறதா மத்திய அரசு? பரபர பின்னணி
டெல்லி: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு சில நாட்களில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விபரம் வருமாறு:

ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை
இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு ராமநவமி கொண்டாட்டப்பட்டது. கோவா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் வன்முறையால் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

பாஜக குற்றச்சாட்டு
இந்நிலையில் தான் சில இடங்களில் நடந்த வன்முறைக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் கார்கோனில் நடந்த தீவைப்பு, கல்வீச்சு சம்பவத்துக்கு பிஎப்ஐ சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டதாக அம்மாநில பாஜக தலைவர் விடி சர்மா குற்றம்சாட்டினார். இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் கராலியில் நடந்த பிரச்சனைக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா காரணம் என பாஜக இளைஞரணி தேசிய தலைவரும், எம்பியுமான தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டி உள்ளார்.

தடை குறித்து விரைவில் அறிவிப்பு
இந்நிலையில் தான் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த அமைப்பை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மத்திய அரசு சார்பில் முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் அறிவிப்பு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உளவுத்துறை, என்ஐஏ அறிக்கை
முதன் முதலாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து உளவுத்துறை சார்பில் 2010ல் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சார்பிலும் பல அறிக்கைகள் மத்திய அரசியடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், ‛‛பயங்கரவாத அமைப்பாக கூறப்படும் மாணவர் இஸ்லாமிய இயக்கம் (சிமி) உடன் இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளதாகவும், கோவா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், மணிப்பூர், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு கிளை அமைப்புகள் உள்ளது. கேரளாவில் எஸ்டிபிஐ எனும் கட்சி செயல்பட்டு வருகிறது'' என்பன போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

தீவிரமானது எப்போது
குறிப்பாக 2017ல் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் இருந்தே இந்த அமைப்பை இந்தியாவில் தடை செய்வது குறித்த செயல்பாடுகள் தீவிரமாக துவங்கியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செயல்பாடுகள் முடிவடைந்துள்ள நிலையில் ராமநவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையை கருத்தில் கொண்டு விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications