மக்களே ரெடியாக இருங்க.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை.. வரப்போகும் கூடுதல் கட்டுப்பாடுகள்?
டெல்லி: உலகம் முழுவதையும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 90 நாடுகளுக்கு மேல் பரவி அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தென் ஆபிரிக்க மருத்துவ நிபுணர்கள் இந்த உருமாறிய வைரஸ் ஆபத்தில்லை என்று கூறியபோதிலும் இது மிகவும் ஆபத்தானது. டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஓமிக்ரான் வைரஸ்
ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விடக்கூடாது என்பதில் இந்தியா மிகவும் கவனமாக இருந்த போதிலும் நமது நாட்டிலும் ஓமிக்ரான் புகுந்து விட்டது. இந்தியாவில் வேகமாக பரவும் ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது, டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 57 பாதிப்புகளும், மகாராஷ்டிராவில் 54 பாதிப்புகளும் உள்ளன.

மாநிலம் வாரியாக பாதிப்புகள்
இது தவிர தெலுங்கானாவில் 24, கர்நாடகாவில் 19, ராஜஸ்தானில் 18, கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகளும் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் மூன்று கேஸ்களும், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா இரண்டு கேஸ்களும் பதிவாகியுள்ளன. ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், லடாக், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒரு பாதிப்பு பதிவாகியுள்ளது.

பிரதமர் மோடி ஆலோசனை
இப்படி நாடு முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்க, ஓமிக்ரான் வைரஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மருத்துவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் இந்த வைரஸ் எந்த நிலையில் உள்ளது? மாநிலங்களில் இதனை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை செய்கிறார். ஓமிக்ரான் மேலும் பரவாமல் தடுக்க என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம்? நாட்டில் இரவு நேர ஊரடங்கை கொண்டு வரலாமா? என்பதும் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எச்சரிக்கை மணி
தேவைப்பட்டால் மாநிலங்கள் இரவு ஊரடங்கு போட்டு கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்த நிலையில் இது தொடர்பாக வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஓமிக்ரான் தவிர, டெல்டா வைரஸ் மாறுபாடும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவதாக மத்திய சுகாதாரர்த்துறை ஏற்கனவே எச்சரிக்கை மணி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications