கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.
ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். ஆனால் இவர்களது ராஜினாமா மீது சபாநாயகர் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

இதையடுத்து ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலையிலான பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து கர்நாடகா சபாநாயகர் முடிவெடுக்கலாம்.
- சபாநாயகர் தமது முடிவெடுக்கும் காலவரையறையை அவரே நிர்ணயித்து கொள்ளலாம்.
- சபாநாயகர் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது
- அப்படி முடிவு எடுக்கும் போது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை அவர் கருத்தில் கொள்ள தேவை இல்லை.
- சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தக் கூடாது.
- அதாவது ஜேடிஎஸ்- காங்கிரஸ் கட்சிகளின் கொறடாக்களின் உத்தரவு இந்த எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தாது.
- தற்போது பிறப்பிக்கப்பட்டிருப்பது இடைக்கால உத்தரவு மட்டுமே.
- இவ்வழக்கில் சபாநாயகரின் அதிகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அது தொடர்பாக விரிவான விசாரணை பின்னர் நடத்தப்படும்.
இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
More From
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications