டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேராபத்து வருகிறதா? பருவநிலை மாறுபாட்டால் 65% பூச்சி இனங்கள் அழிந்துபோக வாய்ப்பு..எச்சரிக்கும் ஆய்வு

Google Oneindia Tamil News

டெல்லி: பருவநிலை மாறுபாடு காரணமாக அடுத்த நூற்றாண்டில் இந்த பூமியில் வாழும் 65 சதவீத பூச்சி இனங்கள் அழியும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

அளவுக்கு அதிகமான மழை, வரலாறு காணாத வறட்சி, உணவுப் பஞ்சம், வெப்ப நிலை அதிகரிப்பு என பல்வேறு சிக்கல்களுக்கும் பருவ நிலை மாறுபாடே காரணமாக அமைந்துள்ளது.

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் டமார் என வெடித்த அரசு பேருந்து டயர்.. குபுகுபுன்னு எரிந்த பயங்கர தீ! சிதம்பரம் பேருந்து நிலையத்தில் டமார் என வெடித்த அரசு பேருந்து டயர்.. குபுகுபுன்னு எரிந்த பயங்கர தீ!

பருவநிலை மாறுபாடு

பருவநிலை மாறுபாடு

முக்கியமாக கரியமில வாயு வெளியேற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி புவியின் வெப்ப நிலை உயர காரணமாக அமைகிறது. இதனால், பனிப்பாறைகள் உருகுதல் , கடல் மட்டம் உயர்வு என நீண்ட கால பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது. பருவநிலை மாறுபாடு காரணமாக மனித சமூகம் மட்டும் இன்றி பூச்சி இனங்களும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. Nature Climate Change- என்ற இதழில் பருவநிலை மாறுபாடு பூச்சியினங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்ற ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

65 சதவீத பூச்சி இனங்கள்

65 சதவீத பூச்சி இனங்கள்

இந்த ஆய்வு முடிவுகளின் படி பருவ நிலை மாறுபாடு காரணமாக அடுத்த நூற்றாண்டில் இந்த பூமியில் வாழும் 65 சதவீத பூச்சி இனங்கள் அழிந்து போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலை அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக விலங்குகளின் எண்ணிக்கை சீர்குலையவும் அழிந்து போகும் அபாயம் அதிகரிக்கக் கூடும் என்றும் முன்பு கணித்ததை விட பருவநிலை மாற்றம் அதிகமாக இருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

தெளிவான ஆய்வு முடிவுகள்

தெளிவான ஆய்வு முடிவுகள்

வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றத்தால் பூச்சி இனங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்டறிய தெளிவான ஆய்வு முடிவுகள் தேவை என்றும் இந்த ஆய்வின் மூலம் அதை வழங்குவதே எங்களின் நோக்கம் என்று ஆய்வில் ஈடுபட்ட குழு தெரிவித்துள்ளது. பூமியின் வெப்ப நிலைக்கு ஏற்ப உடலின் வெப்ப நிலையை தகவமைத்துக்கொள்ள முடியாத பூச்சியினங்கள் அடுத்த நூற்றாண்டில் ஏற்படக்கூடிய கால நிலை மாற்றத்திற்கு ஏற்ப எப்படி செயல்படும் என்பதை ஆய்வு செய்ய மேம்பட்ட மாடல்களை கொண்ட தரவுகளின் அடிப்படையில் குழு ஆய்வு மேற்கொண்டது.

பெரும் அபாயத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு

பெரும் அபாயத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு

இதில் 38 பூச்சி வகைகளில் 25 பூச்சி வகைகள் அழிவு நிலையை சந்திக்கும் அபாயத்தை எதிர்கொண்டதை கண்டறிந்துள்ளது. குறிப்பாக அவை வாழும் சூழல்களில் ஏற்படும் சவாலான மாற்றங்களால் பெரும் அபாயத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும் இந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், பருவநிலை மாறுபாடு உயிரியியல் பன்முகத்தன்மையில்(பல்லுயிர்) எதிர்மறையான தாக்கத்தை ஏற்படும் என்பதையும் நீண்ட கால திட்டமிடுதல் அடிப்படையில் கணித்துள்ளனர்.

சுத்தமான காற்று, குடிநீர்..

சுத்தமான காற்று, குடிநீர்..

அதேபோல், மனித சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு, சுத்தமான காற்று, குடிநீர், கோடிக்கணக்கான விவசாய வேலைவாய்ப்புகளுக்கும் இந்த பன்முகத்தன்மை சீராக நீடிப்பது மிகவும் அத்தியாவசியமானது என்றும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பல்லுயிர் இழப்பு ஓரளவு சரி செய்ய முடியும் என்றாலும், சுற்றுச்சூழல் மாறுபாட்டில் ஏற்படும் மாற்றங்களை நாம் கணிக்கும் திறனை வைத்தே அமையும் என்றும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு இருக்கிறது.

பூச்சி இனங்கள் அழிவு ஏன் ஆபத்தானது?

பூச்சி இனங்கள் அழிவு ஏன் ஆபத்தானது?

இந்த பூமியின் சூழலியலில் அனைத்து உயிரினங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. பூச்சி இனங்களும் இதற்கு எந்த வகையிலும் விதி விலக்கானது அல்ல. இயற்கை கழிவுகளை சிதைப்பது மட்டும் இன்றி பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களின் உற்பத்திக்கு மகரந்த சேர்க்கை மூலம் இந்த பூச்சியினங்கள் உதவுகின்றன. அதேபோல், தீங்கு விளைவிக்கும் நச்சுப்பூச்சிகளை அழிக்கும் பணியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூச்சி இனங்கள் அழிவுக்கு உள்ளாவது இயற்கை சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி பேராபத்துக்கு வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Due to climate change, 65 percent of the insect species living on earth are at risk of extinction in the next century, the study has revealed shocking information.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X