ஆர்டரை தயார் செய்வதில் தாமதம்.. டெல்லி உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை.. டெலிவரி பாய் உட்பட மூவர் கைது
டெல்லி: உணவு ஆர்டரைத் தயாரிப்பதில் தாமதமானதில் ஏற்பட்ட தகராறில், டெல்லியில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஸ்விகி டெலிவரி பாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உணவகத்தை நடத்தி வந்தவர் சுனில். வழக்கம் போல இன்றும் இவரது கடையிலிருந்து ஆர்டரை சேகரிக்க டெலிவரி பாய்கள் உணவகத்திற்கு வந்துள்ளனர்,

அப்போது டெலிவரி பாய் ஒருவரது ஆர்டர் தாமதமானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக உணவக ஊழியர் ஒருவருடன் அந்த டெலிவரி பாய் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உணவக உரிமையாளர் சுனில் இருவருக்கும் இடையே சமாதானப்படுத்த முயன்றுள்ளார்.
இருப்பினும், அவர் தலையிட்ட பிறகு பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ளது, அப்போது நண்பர்களுடன் வந்திருந்த டெலிவரி பாய், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த உணவக உரிமையாளரைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்தவர்களை சுனிலை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இது குறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணையைத் தொடங்கினர்.
இதையடுத்து அந்த டெலிவரி பாய் சுனில், அவரது நண்பர்கள் எனக் கூறப்படும் விகாஸ் சவுத்தரி, தேவேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேநேரம் டெலிவரி பாய் சுனில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை என்றும் விகாஸ் சவுத்தரி தான் உணவக உரிமையாளரைக் கொன்றார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications