Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 7 செகண்ட்தான்! லேட்டாகியிருந்தால் ரிஷப் பண்டிற்கு என்னவாகியிருக்கும்? பஸ் கண்டக்டர் பகீர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் கார் அவரை வெளியே இழுத்த அடுத்த 5 முதல் 7 வினாடிகளுக்குள் தீப்பிடித்து எரிந்து விட்டதாக அவரை காப்பாற்றிய பேருந்து நடத்துநர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தனது வீட்டிற்கு தனியாக காரில் சென்றுக் கொண்டிருந்தார். புத்தாண்டையொட்டி தனது தாயாருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதத்தில் அவர் தான் வருவதை குடும்பத்தாரிடம் சொல்லவில்லை.

நேற்று அதிகாலை உத்தரகண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கின் நர்சன் எல்லையில் இவரது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் மிகவும் அதிவேகமாக வந்து கொண்டிருந்து. இந்த நிலையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது.

கார்

கார்

இதில் கார் பலதூரம் தூக்கி வீசப்பட்டது. உடனே அவ்வழியாக சென்ற ஹரியானா மாநில பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் தங்கள் பேருந்தை சாலையோரம் நிறுத்துவிட்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அப்போது காரின் ஜன்னலை ரிஷப் உடைத்துக் கொணடிருந்தார்.

கிரிக்கெட்

கிரிக்கெட்

ஆனால் கிரிக்கெட் பார்க்காத பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் அவர் ரிஷப் பண்ட் என தெரியவில்லை. எனினும் உடனே ஓடி போய் காரின் கண்ணாடியை உடைக்க அவருக்கு உதவினர். இறுதியாக கார் கண்ணாடியை உடைத்து ரிஷப் வெளியே எடுத்தனர். இந்த சம்பவம் குறித்து பேருந்து நடத்துநர் பரந்ஜித் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் நாங்கள் எங்கள் பேருந்தில் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தோம்.

 டிவைடரில் மோதிய கார்

டிவைடரில் மோதிய கார்

அப்போதுதான் நானும் ஓட்டுநர் சுஷீலும் ஒரு கார் வேகமாக வந்து டிவைடரில் மோதியதை பார்த்தோம். உடனே போய் அந்த வாகனத்தில் இருந்தவரை தூக்கிவிட்டோம். அந்த காரில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பதையும் பார்த்தோம். யாரும் இல்லை. அவரை காரிலிருந்து தூக்கிய 5 முதல் 7 வினாடிகளுக்குள் கார் மளமளவென தீப்பிடித்து முற்றிலும் எரிந்துவிட்டது. அவருக்கு முதுகு பகுதியில் அதிக காயம் ஏற்பட்டது.

கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் வீரர்

அவர் யார் என கேட்ட போதுதான் அங்கிருந்தவர்கள் அவர் கிரிக்கெட் வீரர் என தெரிவித்தனர். அந்த இடத்தில் சிதறி கிடந்த ரிஷப்பின் உடமைகளை எடுத்து ஆம்புலன்ஸில் சென்ற அவரிடம் கொடுத்துவிட்டோம் என பரந்ஜித் தெரிவித்தார். ரிஷப் பண்ட் தற்போது மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவச் செலவுகளை உத்தரகாண்ட் மாநிலமே ஏற்பதாக அறிவித்துள்ளது. பிசிசிஐயும் வேண்டிய உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது.

முகத்தில் காயங்கள்

முகத்தில் காயங்கள்

முகத்தில் ஏற்பட்ட காயங்கள், சிராய்ப்புகள், உருக்குலைந்த காயங்கள் உள்ளிட்டவைகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. மூளையிலும் தண்டுவடத்திலும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் அவருக்கு அந்த பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. ரிஷப் பண்ட் இந்த விபத்தில் பிழைத்ததே மறுபிறவிதான். விபத்து நடந்த இடமும் காரும் ஏதோ போர்க்களம் நடந்தது போல் காட்சியளித்தது என போலீஸார் தெரிவித்தனர்.

 உயிரை காப்பாற்றியவர்கள்

உயிரை காப்பாற்றியவர்கள்

ரிஷப் பண்டின் உயிரை காப்பாற்றியவர்கள் பாராட்டுக்குரியவர்கள், கவுரவிக்கப்படுவார்கள் என உத்தரகாண்ட் டிஜிபி குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் பேருந்து ஓட்டுநர், டிரைவரை மாநில முதல்வர் அழைத்து பாராட்டி சான்றிதழை வழங்கியுள்ளனர். இந்த விபத்து நடந்ததற்கு காரணம் ரிஷப் பண்ட் தூங்கியதுதான் என்கிறார்கள். இதை அவரே போலீஸாரிடம் தெரிவித்தாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+