4 மாசமா குளிக்கல.. குடலைப் பிசைந்த நாற்றம்.. வெறுத்துப் போய் 18 வயது அறை தோழியை விரட்டி அடித்த பெண்!

நான்கு மாதங்களாக குளிக்காமல் இருந்த காரணத்திற்காக தன் அறையில் இருந்து தோழியை வெளியில் விரட்டி அடித்துள்ளார் பெண் ஒருவர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நான்கு மாதங்களாக குளிக்காமல், தன்னை டார்ச்சர் செய்த தனது அறைத் தோழியின் 'நாற்றமெடுத்த' கதையை பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவு செய்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காலை எழுந்தவுடனேயே நாம் செய்ய வேண்டிய வேலைகளில் பல் துலக்குதல், குளித்தல் போன்றவை முக்கியமானவை. அதுவும் கொரோனா தாக்கத்திற்குப் பிறகு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் மக்கள் குளிப்பது, அவர்களது சுகாதாரத்திற்கு மட்டுமின்றி, அவர்கள் உடனிருப்பவர்களுக்கும் நல்லது என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், ஒரு சிலர் சோம்பல் காரணமாக தினமும் குளிக்காமல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குளிப்பார்கள். ஆனால் இளம்பெண் ஒருவர் குளிக்காமல் இருந்ததால், அவரது அறைத் தோழி அவரை அறையை விட்டே விரட்டி அடித்த சம்பவம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

4 மாசம் பாஸ்

4 மாசம் பாஸ்

குளிக்காததற்காக எல்லாம் இப்படியா செய்வது என அவசரப்பட்டு அப்பெண்ணை திட்டி விடாதீர்கள். காரணம் 'எப்பயாவது குளிக்கலைனா ஓகே.. எப்பவுமே குளிக்கலைன்னா எப்புடிங்க..'. அதுவும் ஒருநாள், இரண்டு நாட்கள் இல்லை. சுமார் நான்கு மாதங்களாக தினமும் குளிக்காமலேயே அட்டகாசம் செய்து வந்துள்ளார் அப்பெண்.

அந்த வேதனை இருக்கே வேதனை

அந்த வேதனை இருக்கே வேதனை

தன் அறைத் தோழியால் தான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதை தனது ரெட்டிட் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். அதில், 'எனக்கு 23 வயது. என்னுடன் அறையில் தங்கியிருந்த பெண்ணுக்கு 18 வயது. அவருக்கு சுகாதாரம் பற்றி துளிகூட அக்கறையே கிடையாது. நான்கு மாதங்களாக நாங்கள் இருவரும் ஒரே அறையில் இருந்தோம்.

 சகிக்க முடியல...

சகிக்க முடியல...

அந்த நான்கு மாதங்களில் ஒருமுறை கூட அவள் குளித்ததில்லை. இருப்பினும், தினமும் காலையில் இரண்டு மணிநேரம் ஜாகிங் செல்வாள். அவ்வாறு ஓடிவிட்டு வந்தும் குளிக்க மாட்டாள். என்னால் அந்த கெட்ட நாற்றத்தை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அந்த வாடை எனது வயிற்றை பிசைந்தது.

வீட்டு உரிமையாளரிடம் புகார்

வீட்டு உரிமையாளரிடம் புகார்

நான் பலமுறை ஜாடைமாடையாகவும், பிறகு நேரடியாகவும் இதுபற்றி பேசினேன். சரி குளிக்கிறேன் என்று கூறுவார். ஆனால் அப்படி அவர் குளித்ததே இல்லை. இதனால், வேறு வழியின்றி இந்தப் பிரச்சினையை நான் எனது வீட்டு உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவரே நேரடியாக எங்கள் அறைக்கு வந்தார்.

குமட்டிக் கொண்டு வாந்தி

குமட்டிக் கொண்டு வாந்தி

அவர் வந்தபோது, நாங்கள் இருவருமே அறையில் இருந்தோம். அறைக்குள் நுழைந்த அடுத்த நொடியே அவருக்கு அழுக்கு நாற்றத்தால் வாந்தி வருவதுபோல் ஆகிவிட்டது. அப்போது தான் எனது கஷ்டம் என்ன என்பது அவருக்கு நன்றாக புரிந்தது. உடனே அந்தப் பெண்ணை அழைத்து, 30 நாட்களில் அறையைக் காலி செய்யும்படி கூறிவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.

தப்பேயில்லை

தப்பேயில்லை

கூடவே அந்தப் பதிவில், 'அந்தப் பெண்ணை வெளியே அனுப்பியது தவறா?' எனவும் அப்பெண் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஆனால், இந்தப் பதிவைப் படித்தவர்கள் அனைவரும், 'நீங்கள் செய்தது சரியே. அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை' என கருத்து தெரிவித்துள்ளனர். கூடவே, 'நல்லவேளை அந்தப் பெண் மீது உங்கள் வீட்டு உரிமையாளர் வழக்கு தொடராமல் விட்டாரே..' எனவும் வேடிக்கையாக ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+